குன்னுார்: குன்னுார் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் அம்பிகாபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு வெள்ளியங்கிரி என்பவரின் வீட்டு வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்தது. அங்கு நாயை பிடிக்க முயன்று கிடைக்காமல் திரும்பியது. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'சிறுத்தை மீண்டும் வரும் வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும். ஏற்கனவே, ஊட்டி மைனலை கிராமத்தில், ஒரு குழந்தையை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. மக்கள் இரவு நேரத்தில் நடமாட அச்சமாக உள்ளது' என்றனர்.