தொண்டாமுத்துார்: கோவை அருகே காட்டு யானை தாக்கி, வன ஊழியர் பலியானார்.கோவை வனகோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் உள்ள சீங்கப்பதி மலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 51. இவர், போளுவாம்பட்டி வனச்சரகத்தில்,ஏழு ஆண்டுகளாக சூழல் சுற்றுலா தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை, வனப்பகுதிக்கு சென்றபோது, முருகனை காட்டு யானை தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் யானையை விரட்டி, படுகாயம் அடைந்த முருகனை பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். காருண்யா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.