கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டக் கூடாது:- முதல்வர் ஸ்டாலின்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி
கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டக் கூடாது:- முதல்வர் ஸ்டாலின்


சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேலே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, மீஞ்சூர் அருகே சீமாபுரம் அணைக்கட்டு வள்ளூர் அணைக்கட்டு ஆகியவை மூலம் பாசனத்திற்கு பயன்படுகிறது. மேலும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து, சென்னை முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் பரப்பளவு 3727 சதுர கி.மீ. இதில் 877 சதுர கி.மீ. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது மற்றும் 2850சதுர கி.மீ. தமிழ்நாட்டில் உள்ளது. ஆந்திர அரசு இரு அணைகளை கட்டினால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-ஆக-202204:03:56 IST Report Abuse
வெகுளி மீறு செப்பினத்த மணவாடு கேப்பாரா?.... மாநில கட்சிகள் ஆண்டால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியாது... பா.ஜ. போன்ற தேசிய கட்சி இரண்டு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வரும்போது இதுபோன்ற பிரச்சனைகளை எளிதாக தீர்க்க முடியும் ...
Rate this:
Cancel
ஸ்டிக்கன் 2 - al-rayan,பஹ்ரைன்
14-ஆக-202203:42:28 IST Report Abuse
ஸ்டிக்கன்  2 அவங்களுக்கு புத்தி இருக்கு அவங்க செய்யுறாங்க , நமக்கு வெறும் பேனாதான் வைக்கும் அளவுக்கு புத்தி இருக்கு என்ன செய்யுறது தலையெழுத்த்ஹு
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
13-ஆக-202220:15:45 IST Report Abuse
Fastrack வழக்கமா ஆணையிடுவது தானே வழக்கம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X