''வரும் 2047 இந்தியா வல்லரசாக மாறும்'': மத்திய அமைச்சர் முருகன்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
கோவை: ''வரும், 2047 ம் ஆண்டு அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா வல்லரசாக மாறும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாட்டின், 75 வது சுதந்திர அமுத பெருவிழா கொண்டாட்டமாக தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றன. பிரதமர் மோடி கடந்த, 13- முதல், 15 ம் தேதி
''வரும் 2047 இந்தியா வல்லரசாக மாறும்'': மத்திய அமைச்சர் முருகன்

கோவை: ''வரும், 2047 ம் ஆண்டு அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா வல்லரசாக மாறும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின், 75 வது சுதந்திர அமுத பெருவிழா கொண்டாட்டமாக தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றன. பிரதமர் மோடி கடந்த, 13- முதல், 15 ம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த, 10 நாட்களாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், நம் தேசியக் கொடியின் பெருமையை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லும் விதமாகவும் இம்மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொது மக்கள் பிரதமர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
தமிழகம் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, பாரதியார் போன்ற பல்வேறு பல சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மாநிலம். குறிப்பாக வ.உ.சி., யின், 150- வது ஆண்டு பிறந்த தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். இவர்களை தவிர அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களும் பலர் உள்ளனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடாக இந்தியா செயல்பட்டு வருகிறது. வரும், 2047 ம் ஆண்டில் அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா வல்லரசாக மாறும். இவ்வாறு, முருகன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
14-ஆக-202206:34:19 IST Report Abuse
Suri இவர் பிடித்த அட்டை வேல் மட்டும் தான் இந்தியா வல்லரசாக மாற காரணம் என்று சொல்லுவார் பாருங்க அப்போ சேர்த்து சிரிச்சுடுங்க
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
14-ஆக-202206:32:49 IST Report Abuse
Suri எப்படி மாறும் என்று ஒரே ஒரு குறுக்கு கேள்வி கேட்டு பாருங்க.... அப்புறம் தெரியும் ஒட்டு மொத்த சங்கதி
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
14-ஆக-202205:01:59 IST Report Abuse
Venkatakrishnan சிரிப்பு வரும்
Rate this:
Suri - Chennai,இந்தியா
14-ஆக-202206:35:22 IST Report Abuse
Suriஅது வரை காத்திருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X