ஆதித்யா பிர்லா குழுமத்துடன் ரீபோக் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
இங்கிலாந்தில் 1958-ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கான உடைகள், தலை, உடல் கவசங்கள், ஷூக்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நிறுவனமாக உருவான ஜே டபல்யூ ஃபோஸ்டர் அண்ட் சன்ஸ் நிறுவனம், பின்னாட்களில் ரீபோக் நிறுவனமாக உருவெடுத்து 60 ஆண்டுகளைக் கடந்து விளையாட்டுத் துறை சார் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. தற்போது அமெரிக்க நிறுவனமாகி உள்ள ரீபோக் உலக நாடுகள்
ஆதித்யா பிர்லா, ரீபோக், reebok india, birla group

இங்கிலாந்தில் 1958-ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கான உடைகள், தலை, உடல் கவசங்கள், ஷூக்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நிறுவனமாக உருவான ஜே டபல்யூ ஃபோஸ்டர் அண்ட் சன்ஸ் நிறுவனம், பின்னாட்களில் ரீபோக் நிறுவனமாக உருவெடுத்து 60 ஆண்டுகளைக் கடந்து விளையாட்டுத் துறை சார் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. தற்போது அமெரிக்க நிறுவனமாகி உள்ள ரீபோக் உலக நாடுகள் பலவற்றில் தங்கள் கிளையைப் பரப்பி வருகிறது.


latest tamil news



ரீபோக் இந்தியா இணையதளம் மூலமாக நேரடியாகவும், டீலர்கள் மூலமாகவும் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்திய பங்குச் சந்தையில் முன்னணி வகிக்கும் ஆதித்யா பிர்லா குழுமம் தற்போது ரீபோக்கின் குறிப்பிட்ட சில அங்காடிகளை இயக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரீபோக்கின் தாய் நிறுவனமான ஆதெண்டிக் பிராண்ட் க்ரூப் உடன் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



தற்போது ரீபோக் ஸ்போட்ஸ் காலணிகளை விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் பிட்னஸ் பிரியர்கள் உள்ளிட்ட பலர் வாங்கி அணியத் துவங்கி வரும் நிலையில் ரீபோக் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக தனது ஷூக்கள் விற்பனையை மேலும் பெருக்கத் திட்டமிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
13-ஆக-202220:22:13 IST Report Abuse
Fastrack ரீபோக் அடிடாஸ் பூமா போன்ற முன்னணி நிறுவனங்கள் அமெரிக்காவில் கிடைக்கும் தரத்தில் விற்பனை செய்வார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X