கண்ணாடி பாட்டிலில் ஆவின் விற்பனை சாத்தியமா: ஐகோர்ட்

Added : ஆக 13, 2022 | |
Advertisement
சென்னை:ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது 'டெட்ரா பேக்'கில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தி யாளர்கள் தரப்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள்

சென்னை:ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது 'டெட்ரா பேக்'கில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தி யாளர்கள் தரப்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு மீண்டும் வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் தான் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. உடலுக்கு தீங்கு என தெரிந்தும், அதில் வரும் உணவு பொருட்களை உண்கிறோம். பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்கப்படுவதை ஏன் தடை செய்யக் கூடாது? 'அமுல், நெஸ்லே' ஆகிய நிறுவனங்கள், 'டெட்ரா பேக்'களில் பொருட்களை வழங்குவதுபோல, ஆவின் நிறுவனமும், கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்கக் கூடாது? இவ்வாறு நீதிபதிகள் கேட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறியதாவது:உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்ய தயாராக இருக்கிறோம்; அதுகுறித்து அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை, அவ்வப்போது ஆய்வு செய்து தடுக்கப்படுகிறது.
கடந்த 20 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 22 ஆயிரத்து 930 கடைகள் சோதனை செய்யப்பட்டு, 8,550 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வழக்கு விசாரணைக்கு வரும் போது தான் அதிரடி சோதனை் நடத்தப்படுகின்றன. சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டிய பொறுப்பு, சமூகத்திற்கு உள்ளது.
ஆவின் பாலை பாட்டில் அல்லது 'டெட்ரா பேக்கில்' விற்பனை செய்ய முடியுமா என, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்.மேலும், குடிநீர் வினியோகிக்கும் 'வாட்டர் கேன்'களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என, உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை, 29க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X