எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் ஈரான் ஆதரவாளர் என தகவல்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
நியூயார்க் : அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியின்போது, இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் ஈரானின் புரட்சிகர படையின் ஆதரவாளராக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, 'த சட்டானிக் வெர்ஸஸ்' என்ற புத்தகம்,
எழுத்தாளர், சல்மான் ருஷ்டி,  தாக்கிய நபர், ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க் : அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியின்போது, இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் ஈரானின் புரட்சிகர படையின் ஆதரவாளராக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, 'த சட்டானிக் வெர்ஸஸ்' என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும்போராட்டங்கள் நடந்தன.


latest tamil news

இந்தப் புத்தகம், 1988ல் ஈரானில் தடை செய்யப்பட்டது. பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. 'ருஷ்டியை கொன்றால், 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனி அப்போது அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் ருஷ்டி கலந்து கொண்ட போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், மேடைக்குச் சென்று சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். மேடையில் சரிந்து விழுந்த சல்மான் ருஷ்டி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.அவருடைய கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் அபாய கட்டத்தில் உள்ளதாகவும், பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ருஷ்டியை தாக்கிய நபர் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹாரி மட்டார், 24, என்பது தெரியவந்துள்ளது. ஷியா முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும்,ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனியின் புரட்சிகர படைக்கு ஆதரவாகவும் அவர் பல பதிவுகளை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஈரான் பத்திரிகைகள் புகழாரம்இதற்கிடையே ஈரானிலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகள் சல்மான் ருஷ்டியை தாக்கிய ஹாரி மட்டார் என்ற இளைஞரை புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202213:13:41 IST Report Abuse
பேசும் தமிழன் அமெரிக்கா இப்போதே விழித்து கொள்வது நல்லது. கள்ளத்தனமாக அகதி என்ற பெயரில் உள்ளே வந்த மூர்க்க கும்பலை அடித்து விரட்ட வேண்டும்...... இல்லை அமெரிக்கா கதி அதோ கதி தான்
Rate this:
Cancel
14-ஆக-202206:56:07 IST Report Abuse
அப்புசாமி எல்லாம் இரான் நாட்டு முல்லா குடுத்த ஃபட்வா வால் வந்த வினை. ஃபட்வா குடுத்தவரே வாபஸ் வாங்கிட்டாலும் மூர்க்கன் அதை மறக்கமாட்டான். செஞ்சிட்டான்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
14-ஆக-202200:51:23 IST Report Abuse
Fastrack பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் அவர்களின் தற்போதய கணவர் இரான் பூர்வீகம் ...பில் கேட்ஸ் மகள் மணந்தது எகிப்து பூர்வீகம் கொண்ட அமைதி மார்க்கம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X