மரங்களை வெட்ட அனுமதி வேண்டும்மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் மனு

Added : ஆக 13, 2022 | |
Advertisement
கூடலுார்:பெரியாறு அணையில் 152 அடி தேக்க அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடைஞ்சலாக இருக்கும் 13 மரங்களை வெட்ட அனுமதி பெற்றுத் தரக் கோரி, தேக்கடிக்கு வந்த மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவிடம் தமிழக விவசாயிகள் மனு கொடுத்தனர்.பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக தேக்கிக் கொள்ளலாம் எனவும்
மரங்களை வெட்ட அனுமதி வேண்டும்மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் மனு

கூடலுார்:பெரியாறு அணையில் 152 அடி தேக்க அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடைஞ்சலாக இருக்கும் 13 மரங்களை வெட்ட அனுமதி பெற்றுத் தரக் கோரி, தேக்கடிக்கு வந்த மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவிடம் தமிழக விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக தேக்கிக் கொள்ளலாம் எனவும் 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பேபி அணையை பலப்படுத்துவதற்கு கேரள வனத்துறை பல்வேறு இடைஞ்சல்களை செய்து வருகிறது. பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள 13 மரங்களை வெட்டு வதற்கு அனுமதி வழங்குவதில் மத்திய வன அமைச்சகமும் காலம் தாழ்த்தி வருகிறது.


இந்நிலையில் தேக்கடியில் சர்வதேச யானைகள் தின விழாவை துவக்கி வைக்க வந்த மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவிடம், விவசாயிகள் சங்கங்கள் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'உடனடியாக 13 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற்று தரவும், அணைப்பகுதிக்கு தளவாடப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு சேதமடைந்த வல்லக்கடவு வனப்பாதையை சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X