காஷ்மீரில் பயங்கரவாத தொடர்பு : 4 அரசு ஊழியர்கள் அதிரடி 'டிஸ்மிஸ்'

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | |
Advertisement
ஸ்ரீநகர் :நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்துக்காக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீனின் மகன் உட்பட நான்கு பேரை, ஜம்மு - காஷ்மீர் அரசு நேற்று 'டிஸ்மிஸ்' செய்தது. ஜம்மு - காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு யாரேனும்
காஷ்மீர்,  பயங்கரவாத தொடர்பு , 4 அரசு ஊழியர்கள்  'டிஸ்மிஸ்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர் :நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்துக்காக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீனின் மகன் உட்பட நான்கு பேரை, ஜம்மு - காஷ்மீர் அரசு நேற்று 'டிஸ்மிஸ்' செய்தது.
ஜம்மு - காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு யாரேனும் மறைமுகமாக உதவுகின்றனரா என, அரசு தீவிர விசாரணையில் ஈடுபட்டது.


latest tamil news



இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான சையத் சலாவுதீனின் மகன் சையத் அப்துல் முயீத், ஹிந்துக்களை கொன்று குவித்த வழக்கில் சிறையில் உள்ள பரூக் அகமது தர்ரின் மனைவி, காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முஹீத் அகமது மற்றும் மஜித் ஹுசைன் காத்ரி ஆகியோர் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் பயங்கரவாத இயக்கங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தனர். பிரிவினைவாத, பயங்கரவாத நிகழ்ச்சிகளை பிரசாரம் செய்தல், பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தல், போலி 'பாஸ்போர்ட்'கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.


இதையடுத்து, இவர்களை ஜம்மு - காஷ்மீர் அரசு உடனடியாக பணி நீக்கம் செய்தது. இவர்கள் அனைவரும் அரசின் முக்கிய பதவிகளை வகித்து வந்தவர்கள்.
ஜம்மு - காஷ்மீரில், சட்ட விரோத செயல்களுக்காக, அரசுப் பணிகளில் இருந்து இதுவரை 40
ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X