இயற்கையான அளவில்லா ஆற்றல் சாத்தியமா... என்ன சொல்கிறது இயற்பியல்?| Dinamalar

இயற்கையான அளவில்லா ஆற்றல் சாத்தியமா... என்ன சொல்கிறது இயற்பியல்?

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | |
தாமஸ் தேவன்போர்ட், வில்லியம் ஸ்டர்கான் ஆகியோர் கடந்த 1834-ம் ஆண்டு முதல் மின்சார மோட்டாரை உருவாக்கினர். இந்த மோட்டார் தொடர்ந்து சுழல்வதால் இதனைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது முதல் பல்வேறு இயந்திரப் பணிகளைச் செய்யலாம். இன்று நாம் பயன்படுத்து சீலிங் ஃபேன் துவங்கி மிக்ஸி, கிரைண்டர் வரை மின்காந்த சக்தியில் சுற்றும் மோட்டார் பயன்படாத இடங்களே இல்லை எனலாம். 19-ம்
அளவில்லா ஆற்றல் சாத்தியமா, இயற்பியல் புதிர், infinite energy possible, Kinetic energy

தாமஸ் தேவன்போர்ட், வில்லியம் ஸ்டர்கான் ஆகியோர் கடந்த 1834-ம் ஆண்டு முதல் மின்சார மோட்டாரை உருவாக்கினர். இந்த மோட்டார் தொடர்ந்து சுழல்வதால் இதனைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது முதல் பல்வேறு இயந்திரப் பணிகளைச் செய்யலாம். இன்று நாம் பயன்படுத்து சீலிங் ஃபேன் துவங்கி மிக்ஸி, கிரைண்டர் வரை மின்காந்த சக்தியில் சுற்றும் மோட்டார் பயன்படாத இடங்களே இல்லை எனலாம். 19-ம் நூற்றாண்டுகளில் மின்சார மோட்டார்கள் கொண்டு தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பல வித மின் உபகரணங்களைக் கண்டுபிடித்தனர்.

எனினும் டிசி மோட்டார் இயங்க மின்சாரம் அல்லது பேட்டரி தேவை. மின்சார ஆற்றல் மூலமாகவே இந்த மோட்டார் சுழல்கிறது. காற்றாலை கம்பத்தில் உள்ள இறகுகளை காற்று சுழற்றியடிப்பதால், அதன் நடுவில் உள்ள மோட்டார் சுழன்று மின்சாரம் தயாரிக்கிறது. இதேபோல கொட்டும் அருவி இடையே வைக்கப்படும் சுழல் விசிறியை தண்ணீர் சுழற்றியடிப்பதால் நடுவில் உள்ள மோட்டார் செயல்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது.


latest tamil news



ஆனால் மின்சாரம், காற்று, தண்ணீர் உள்ளிட்ட எந்தவித வெளிப்புற ஆற்றலும் தேவைப்படாமல் மோட்டாரை சுற்றவைக்க முடியுமா என பல ஆண்டுகாலமாக ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதுமட்டும் சாத்தியமானால் மோட்டார் சுழற்சி நிற்கவே நிற்காது. இதனால் தடையில்லா இலவச மின்சாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும் என நம்பப்பட்டது.

இந்தியாவில் கூட நமது கணித மேதைகள் பலர் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பாஸ்கரா என்கிற இந்திய கணித மேதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிற்காமல் சுழலும் பாஸ்கரா சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வெளி ஆற்றல் இன்றி ஒரு சக்கரத்தை தொடர்ந்து சுற்றவைக்க முடியாது என்று கூறுகிறது இன்றைய நவீன இயற்பியல். எனவே இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றும் உலகம் முழுக்க பல இயற்பியல் ஆராய்ச்சி மாணவர்கள் அளவில்லா ஆற்றல் இயந்திரத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதையும் மறுப்பதற்கில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X