கடன் வாங்கியவர்களை மிரட்ட கூடாது : ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :கடனை வசூலிக்கும் ஏஜன்டுகள், கடன் வாங்கியவர்களை எக்காரணம் கொண்டும் மிரட்டுவது கூடாது என்றும், காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்குப் பிறகும் போனில் அவர்களை அழைக்க வேண்டாம் என்றும், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. புதிய விதிமுறைவங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, கடனை வசூலிப்பது குறித்து, கூடுதலாக சில புதிய விதிமுறைகளை,
 கடன் வாங்கியவர்கள் ,   ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

புதுடில்லி :கடனை வசூலிக்கும் ஏஜன்டுகள், கடன் வாங்கியவர்களை எக்காரணம் கொண்டும் மிரட்டுவது கூடாது என்றும், காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்குப் பிறகும் போனில் அவர்களை அழைக்க வேண்டாம் என்றும், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


புதிய விதிமுறை



வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, கடனை வசூலிப்பது குறித்து, கூடுதலாக சில புதிய விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், கடனை வசூலிக்கும் முகவர்கள், எக்காரணம் கொண்டும் கடன் வாங்கியவர்களை வார்த்தைகளாலோ, அல்லது உடல்ரீதியாகவோ மிரட்டவோ, துன்புறுத்தவோ கூடாது என அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news



அறிவுறுத்தல்



மேலும், கடன் வாங்கியவர்களுக்கு, எந்த ஒரு தகாத குறுஞ்செய்திகளையும் அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துஉள்ளது. அத்துடன், அச்சுறுத்தும் வகையிலான அனாமதேய அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், காலை 8 மணிக்கு முன்பும்,
மாலை 7 மணிக்கு பின்பும் அவர்களை போனில் அழைக்கக் கூடாது என்றும் தெரிவித்துஉள்ளது.ரிசர்வ் வங்கி, அவ்வப்போது உரிய வழிகாட்டுமுறைகளை வெளியிட்டு வருகிறது. கடன் வாங்கியவர்களை அகால நேரத்தில் அழைத்து மிரட்டுவது உள்ளிட்டவை கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
இருப்பினும், அண்மைக் காலமாக, கடனை வசூலிப்பதற்காக நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி இந்த கூடுதல் வழிகாட்டுமுறைகளை புதிதாக வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202219:15:24 IST Report Abuse
Agomathinayagam 0 ,,,,,
Rate this:
Cancel
14-ஆக-202206:53:19 IST Report Abuse
அப்புசாமி கடன் வாங்கியவர்களை கிச்சு கிச்சு மூட்டி அன்பா பேசி கடனை வசூல் செய்யணும். அப்படி முடியலேன்னா, எங்க கிட்டே வாங்க. வாராக்கடன் வங்கியிலே சேத்துடறோம்.
Rate this:
Cancel
14-ஆக-202206:51:13 IST Report Abuse
அப்புசாமி முதலில் கண்டவனுக்கு கடன் குடுக்காதேன்னு அறிவுரை சொல்லியிருக்கணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X