கூட்டணி கட்சிகளை பா.ஜ., அழிக்கிறதா?: பீஹார் அரசியல் மாற்றம் சொல்வது என்ன?

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
கடந்த 2014 முதல் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வரும் பா.ஜ., தங்கள் கூட்டணி கட்சிகளை அழித்து அதன் வாயிலாக வளர்ச்சி அடைகிறதா என்ற கேள்வி, அரசியல் களத்தில் விவாத பொருளாகி உள்ளது. அதே நேரத்தில், 'பலவீனமாக உள்ள மாநிலத்தில் கால்பதிக்க, கூட்டணி கட்சிகளின் தயவை பா.ஜ., சார்ந்திருப்பது, அதன் ராஜதந்திரம்' என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடந்த 2014 முதல் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வரும் பா.ஜ., தங்கள் கூட்டணி கட்சிகளை அழித்து அதன் வாயிலாக வளர்ச்சி அடைகிறதா என்ற கேள்வி, அரசியல் களத்தில் விவாத பொருளாகி உள்ளது. அதே நேரத்தில், 'பலவீனமாக உள்ள மாநிலத்தில் கால்பதிக்க, கூட்டணி கட்சிகளின் தயவை பா.ஜ., சார்ந்திருப்பது, அதன் ராஜதந்திரம்' என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.latest tamil news
சமீபத்தில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் விலகினார். இது, நிதிஷ்குமாரின் ராஜதந்திரம் என கூறப்பட்டாலும், பா.ஜ.,வின் வியூகமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் குழப்பம் உதாரண மாக கூறப்படுகிறது.மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா இடையிலான கூட்டணி 1989ல் உருவானது.

இரு கட்சியினரும் ஒன்றாக இணைந்து 1990 சட்டசபை தேர்தலை சந்தித்தனர். சிவசேனா 183 இடங்களில் போட்டியிட்டு, 52 இடங்களில் வென்றது. பா.ஜ., 105 இடங்களில் போட்டியிட்டு, 42 இடங்களில் வென்றது.பின், 29 ஆண்டுகள் கழித்து, 2019ல் இதே கூட்டணி மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது, சிவசேனாவை விட பா.ஜ., மிகப் பெரும் கட்சியாக வளர்ந்திருந்தது. மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் சிவசேனா 126 இடங்களில் போட்டியிட்டு, 55 இடங்களில் மட்டுமே வென்றது. மாறாக, 162 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 106 இடங்களை பிடித்தது.

முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்த உத்தவ் தாக்கரே முதல்வர் ஆனார். இப்போது சிவசேனா கட்சிக்கு உள்ளேயே பிளவு ஏற்பட்டு, பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார். ஷிண்டேவை துாண்டிவிட்டு பா.ஜ., குளிர்காய்ந்துள்ளதாக கூறப்பட்டாலும், பா.ஜ.,வின் ராஜதந்திர நகர்வை கண்டு எதிர்க்கட்சியினர் மிரண்டு போயினர்.

பீஹாரிலும் இதே நிலை தான். இங்கு பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இடையிலான 20 ஆண்டு கூட்டணியில், நிதிஷ்குமார் தலைமையிலேயே ஆட்சி நடந்தது. கடந்த 2005 பீஹார் சட்டசபை தேர்தலில், 139 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், 88 இடங்களில் வென்றது. 102 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 55 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலைமை, 2020 பீஹார் சட்டசபை தேர்தலில் தலைகீழாக மாறியது. இந்த தேர்தலில் பா.ஜ., 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை எதிர்த்து, 137 தொகுதிகளில் லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வான் வேட்பாளர்களை நிறுத்தினார். பா.ஜ.,வின் மறைமுக ஆதரவு பெற்ற இவர், ஐக்கிய ஜனதா தளத்தின் ஓட்டுகளை பிரித்து தோல்விக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறைவான இடங்களில் வெற்றி பெற்ற போதும், பா.ஜ., ஆதரவுடன் நிதிஷ் மீண்டும் முதல்வரானார்.

அப்போது முதலே கூட்டணிக்குள் உரசல் ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பிரச்னை பூதாகரமாக வெடித்து, நிதிஷ்குமார் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகினார். தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் பீஹார் முதல்வராக தொடர்கிறார்.அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் பீஹாருக்குள் நுழைந்த பா.ஜ., தற்போது மிகப் பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. இதே வியூகத்தை தான் பா.ஜ., பல்வேறு மாநிலங்களிலும் கையாண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


latest tamil newsஇந்த வியூகத்தை பா.ஜ., தமிழகத்திலும் கையாள்வதாக கூறப்படுகிறது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நேரம், 2021 சட்டசபை தேர்தலில், நான்கு இடங்களில் வெற்றி பெற்றதன் வாயிலாக, திராவிட கட்சிகளின் கோட்டை என கூறப்படும் தமிழகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கணக்கை பா.ஜ., துவக்கியுள்ளது. பா.ஜ.,வை பொறுத்தவரை, கூட்டணி கட்சிகளுடன் நீண்ட, நெடிய உறவை பேணுவதை காட்டிலும், பலவீனமாக உள்ள மாநிலங்களில் தங்கள் கால்தடத்தை பதிக்க, கூட்டணி கட்சிகளை சார்ந்து இருப்பது அதன் ராஜதந்திரம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
14-ஆக-202215:15:18 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN எந்த கோவிலும் அரசு சொத்து அல்ல.. வெறும் கண்கானிப்பாளர்கள் மட்டுமே..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
14-ஆக-202213:29:34 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "'பலவீனமாக உள்ள மாநிலத்தில் கால்பதிக்க, கூட்டணி கட்சிகளின் தயவை பா.ஜ., சார்ந்திருப்பது, அதன் ராஜதந்திரம்'" எதைத்தான் ராஜதந்திரம்ன்னு சொல்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு.. இதே ரா.தந்திரத்தை கையாண்டுதான் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ் ஒண்ணுமே இல்லாம போச்சு .....
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
14-ஆக-202206:13:15 IST Report Abuse
Suri இதை வியூகம் என்று சொன்னால் யாரும் வாயால் சிரிக்கமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X