தைவானுக்கு தொடர்ந்து ஆதரவு: அமெரிக்கா திட்டவட்டம்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வாஷிங்டன்-'தைவான் அரசு சுதந்திரமாக செயல்படவும், அந்த பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தைன்மையை ஏற்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்' என, அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. கிழக்காசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது; தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக இணைக்க ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்-'தைவான் அரசு சுதந்திரமாக செயல்படவும், அந்த பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தைன்மையை ஏற்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்' என, அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.



latest tamil news



கிழக்காசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது; தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக இணைக்க ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தார். சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி பெலோசி தைவானுக்கு வந்தது, அந்த நாட்டுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தென் சீன கடல் பகுதியில் தைவான் ஜலசந்தியில் கடந்த வாரம் சீன ராணுவம் போர் பயிற்சியை துவங்கியது. இதற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்தும், சீனா அதை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபரின் இந்தோ - பசிபிக் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் கர்ட் காம்பெல் கூறியதாவது:தைவான் அரசு சுதந்திரமாக செயல்படவும், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும்.


latest tamil news



இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். தைவானுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். தைவானை மிரட்டி அடிபணிய வைப்பது தான் சீனாவின் நோக்கம்.சர்வதேச சட்ட விதிகள் அனுமதிக்கும் பகுதிகளில் அமெரிக்க போர் விமானங்கள் தொடர்ந்து பறக்கும். தைவான் கடல் பிராந்தியத்தில் அடுத்த சில வாரங்களில் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். தைவானுடன் செய்து கொண்ட நட்பு ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்கா செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202208:09:31 IST Report Abuse
Bhuvaneswari Bhuvaneswari next தைவான்... 😂
Rate this:
Cancel
14-ஆக-202204:07:28 IST Report Abuse
Nagendran,Erode தைவான் அமெரிக்காவை நம்பக் கூடாது.உக்ரைனை இப்படி மோசமான நிலமைக்கு ஆளாக்கியதே அதை உசுப்பேற்றி விட்ட அமெரிக்காதான்.எனவே தைவான் இந்த அமெரிக்காவிடம் உஷாராக இருப்பதே நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X