நார்த் பிளாக்கில் தமிழ் மணம்| Dinamalar

நார்த் பிளாக்'கில் தமிழ் மணம்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
புதுடில்லி: சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க புதுடில்லியின் 'நார்த் ப்ளாக்'கில் உள்ள நிதி அமைச்சகத்திற்கு சென்றார். தமிழக அமைச்சர்கள் புதுடில்லி வந்தால், தங்களுடைய பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து தான் மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் தியாகராஜன், 'கோட், சூட், டை' என அமர்க்களமான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க புதுடில்லியின் 'நார்த் ப்ளாக்'கில் உள்ள நிதி அமைச்சகத்திற்கு சென்றார்.



latest tamil news



தமிழக அமைச்சர்கள் புதுடில்லி வந்தால், தங்களுடைய பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து தான் மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் தியாகராஜன், 'கோட், சூட், டை' என அமர்க்களமான உடையில் வந்து நிர்மலாவைச் சந்தித்து பூச்செண்டு அளித்தார். இவருடைய உடையைப் பார்த்த நிர்மலா, ஏதோ வெளிநாட்டு பிரமுகர் தான் என்னை சந்திக்க வந்திருக்கிறாரோ என நினைத்தேன் என சிரித்துக் கொண்டே சொன்னாராம்.

காங்., மூத்த தலைவர் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது எப்போதும் வேட்டியில் தான் வருவார் என பக்கத்திலிருந்த ஒரு அதிகாரி சொல்ல, அவரைக் கோபமாக பார்த்தாராம் தமிழக நிதி அமைச்சர்.நிர்மலா சீதாராமனும், தியாகராஜனும் தமிழில் பேசிக் கொண்டனர்.


latest tamil news




மத்திய நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதனும் தமிழர். தமிழக நிதி அமைச்சருடன் வந்திருந்த நிதித்துறை செயலர் முருகானந்தமும் தமிழர். இவர்கள் நால்வரும் தமிழிலேயே பேசிக் கொண்டனர். இதைப் பார்த்த வட மாநில அதிகாரிகள், நார்த் ப்ளாக்கில் மீண்டும் தமிழ் மணம் வீச ஆரம்பித்துவிட்டதே என பேசிக் கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X