எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தி.மு.க., எம்.பி.,

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா மிகவும் சீனியர். இவர் பல ஆண்டுகளாக எம்.பி.,யாக இருப்பதால், வட மாநில அரசியல் தலைவர்களுடன் நல்ல பழக்கம் உண்டு. 'மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.,விற்கு எதிராக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை' எனக் கூறி வரும் சிவா, இதை சரிசெய்ய எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா மிகவும் சீனியர். இவர் பல ஆண்டுகளாக எம்.பி.,யாக இருப்பதால், வட மாநில அரசியல் தலைவர்களுடன் நல்ல பழக்கம் உண்டு. 'மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.,விற்கு எதிராக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை' எனக் கூறி வரும் சிவா, இதை சரிசெய்ய எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.



latest tamil news




பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவரும், ராஜ்யசபா துணை தலைவருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங்குடன் சிவாவிற்கு நல்ல பழக்கம் உண்டு. இதே போல மனோஜ் குமார் ஜா என்ற எம்.பி.,யுடனும் சிவாவிற்கு நெருக்கம் உண்டு. இவர், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்; லாலுவின் மகனும், பீஹாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிற்கு மிகவும் நெருக்கமானவர்.


latest tamil news



இந்த இருவருடனும் சிவா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பீஹாரில் சமீபத்திய ஆட்சி மாற்றத்திற்கு 'நான் தான் காரணம்' எனக் கூறி வரும் சிவா, இதே போல மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பேசி, 2024 லோக்சபா தேர்தலில் ஒன்றிணைந்து, பா.ஜ.,வை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் எனவும் கூறி வருகிறாராம்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால், ஸ்டாலின் துணை பிரதமராவார் என சக தி.மு.க., - எம்.பி.,க்களிடம் சொல்கிறாராம் சிவா.'அருண் ஜெட்லி, பிரணாப் முகர்ஜி, சரத் பவார் ஆகியோரைப் போல தன்னை ஒரு அரசியல் சாணக்கியராக நினைத்து சிவா செயல்படுகிறார்' என தி.மு.க., - எம்.பி.,க்களே கிண்டல் அடிக்கின்றனராம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணகிரி சுந்தரமூர்த்தி ஏதோ திருச்சி மாவட்டத்தில் நானும் அரசியல் செய்கிறேன் என்று செல்வதற்கு இது ஒரு முயற்சி விடுங்க அவர் என்ன பீகருக்கும், வெஸ்ட் பெங்காலுக்குமா போக போறாரு அப்படியே போக நினைத்தாலும் திராவிட மாடலை அங்கெல்லாம் பரப்ப முடியாது
Rate this:
Cancel
14-ஆக-202212:20:48 IST Report Abuse
அருணா வாரிசுக்கு வழியா
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202210:25:06 IST Report Abuse
Mani . V ஆமா, அந்த மேடம் இப்ப பாஜக தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X