அதிர்ச்சியில் பா.ஜ., தலைமை

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: பீஹாரில் சமீபத்தில் நடந்த அதிரடி ஆட்சி மாற்றம், பா.ஜ.,வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் உறவு சரியில்லை என்றாலும், இவ்வளவு சீக்கிரமாக அவர் கூட்டணியை விட்டு வெளியேறுவார் என பா.ஜ., சீனியர் தலைவர்களே எதிர்பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது. 'பா.ஜ., தன் கட்சியை உடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் நிதிஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பீஹாரில் சமீபத்தில் நடந்த அதிரடி ஆட்சி மாற்றம், பா.ஜ.,வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் உறவு சரியில்லை என்றாலும், இவ்வளவு சீக்கிரமாக அவர் கூட்டணியை விட்டு வெளியேறுவார் என பா.ஜ., சீனியர் தலைவர்களே எதிர்பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது.



latest tamil news




'பா.ஜ., தன் கட்சியை உடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், லாலு மகனுமான தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்துவிட்டார்' என ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், 'முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட தேஜஸ்வி யாதவின் கனவிற்கும் கடிவாளம் போட்டு அவரை நிதிஷ்குமார் துணை முதல்வராக்கிவிட்டார்' என அவர்கள் பாராட்டுகின்றனர்.

இன்னொரு பக்கம் லாலு குடும்பத்தினர் மீதான பல ஊழல் வழக்குகளை சி.பி.ஐ., தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், அவர்கள் கட்சியின் நிதி நிலைமை படு மோசமாக உள்ளது. வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கும், 2025 பீஹார் சட்டசபை தேர்தலுக்கும் செலவு செய்ய பணம் தேவை என்பதால், பல முக்கிய அமைச்சர் பொறுப்புகளை தன் கட்சிக்காரர்களுக்கு வாங்கி, பணம் திரட்ட திட்டமிட்டுள்ளாராம் தேஜஸ்வி.


latest tamil news



ஐக்கிய ஜனதா தள எம்.பி.,க்களின் ஆதரவு, பார்லி.,யில், குறிப்பாக ராஜ்யசபாவில் தேவைப்பட்டு வந்த நிலையில், அவர்கள் தே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், எப்படி சமாளிப்பது என பா.ஜ., தலைவர்கள் யோசித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16-ஆக-202213:21:00 IST Report Abuse
N Annamalai நல்ல திருப்புமுனை இந்த மாற்றம்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
15-ஆக-202217:46:07 IST Report Abuse
sankar தன் வினை தன்னைச் சுடும்
Rate this:
Cancel
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
14-ஆக-202208:58:53 IST Report Abuse
Nithila Vazhuthi பாஜகவிற்க்கு எதிராக யாராவது செயல்பட்டால் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X