தேசிய கொடி பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்திய தெலுங்கானா அமைச்சர்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில் தேசிய கொடி யாத்திரையின் போது அம்மாநில அமைச்சர் போலீஸ்காரரின் சர்வீஸ் துப்பாக்கியை பறித்து வானத்தை நோக்கி சுட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாட, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, 'வீடு தோறும் மூவர்ணம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதை செயல்படுத்தும்படி, மாநிலங்களுக்கு அழைப்பு
 Telangana minister opens fire in air to launch freedom rally

ஐதராபாத்: தெலுங்கானாவில் தேசிய கொடி யாத்திரையின் போது அம்மாநில அமைச்சர் போலீஸ்காரரின் சர்வீஸ் துப்பாக்கியை பறித்து வானத்தை நோக்கி சுட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாட, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, 'வீடு தோறும் மூவர்ணம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதை செயல்படுத்தும்படி, மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காக பல்வேறு மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


latest tamil newsஇந்நிலையில் தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச கவுடு தனது ஆதரவாளர்களுடன் இன்று மெகபூபா மாவட்டத்தில் தேசிய கொடியுடன் பேரணி நடத்தினார்.

அப்போது பாதுகாப்பு வந்திருந்த போலீஸ்காரர் வைத்திருந்த சர்வீஸ் துப்பாக்கியை பறித்து வானத்தை நோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.


கூட்டத்தில் மத்தியில் எழுந்த துப்பாக்கிச்சூடு சத்தத்தால் அங்கிருந்தவர்கள் பீதியடைந்தனர். போலீஸ்காரின் சர்வீ்ஸ் துப்பாக்கியை தவறாக பயன்படுத்தியது குற்றம் என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202210:51:04 IST Report Abuse
ஆரூர் ரங் கவுடு என்றால் கள் இறக்குபவர் என்று கேள்விப்பட்டேன். அதான் ஸ்டெடியாக😉 இல்லை போலிருக்கிறது.
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
14-ஆக-202207:33:57 IST Report Abuse
shyamnats வன்மையாக கண்டிக்க பட வேண்டியது. சட்ட மீறல்கூட. கூட இருப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ,
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
14-ஆக-202200:28:22 IST Report Abuse
Fastrack விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச கவுடு அவர்களுக்கு குழந்தை குட்டி இருக்கா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X