பீஹாரில் ஆட்சியை தக்க வைக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு| Dinamalar

பீஹாரில் ஆட்சியை தக்க வைக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
பாட்னா-பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தது. இங்கு, சமீபத்தில் பா.ஜ., தலைவர்களுக்கும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா-பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.




latest tamil news


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தது. இங்கு, சமீபத்தில் பா.ஜ., தலைவர்களுக்கும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.



இந்நிலையில் ஆளும், 'மகாகட்பந்தன்' கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால், குழப்பம், கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆட்சி கவிழும் சூழல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சியின் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., வலைவிரித்து, ஆட்சியை கவிழ்க்கலாம் எனக் கூறப்படுகிறது.



latest tamil news


இதையடுத்து கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பேசித் தீர்க்கலாம் என, கூட்டணிக் கட்சியினர் கருதுகின்றனர். இதையடுத்து ஒருங்கிணைப்பு குழு அமைக்கும் நடவடிக்கை வேகம் எடுத்துள்ளது.



இது குறித்து முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர். அடுத்த சில நாட்களில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு விடும் என, பீஹார் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X