'ஆர்டர்லி'களை அனுப்புங்கள்:அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை-'வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் 'ஆர்டர்லி'களை உடனடியாக, காவல் பணிக்கு அனுப்பாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீஸ் உயரதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். குற்றம்ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில், 'ஆர்டர்லி' என்ற நடைமுறை இருந்து வருகிறது. போலீஸ் பணிக்கு எடுக்கப்பட்டவர்கள், உயரதிகாரிகளின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் 'ஆர்டர்லி'களை உடனடியாக, காவல் பணிக்கு அனுப்பாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீஸ் உயரதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news




குற்றம்



ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில், 'ஆர்டர்லி' என்ற நடைமுறை இருந்து வருகிறது. போலீஸ் பணிக்கு எடுக்கப்பட்டவர்கள், உயரதிகாரிகளின் வீடு மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்வதற்காக பணியமர்த்தப்படுவது, 'ஆர்டர்லி' எனப்படுகிறது.தமிழகத்தில் தற்போது, 1,000 க்கும் மேற்பட்ட ஆர்டர்லிகள், போலீஸ் உயரதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், 'ஆர்டர்லி என்ற பெயரில், போலீசாரை தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். 'எனவே, போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை உடனடியாக காவல் பணிக்கு திரும்ப பெறப வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய, 19 ஆர்டர்லிகள் மட்டுமே திரும்ப பெறப்பட்டனர்.



ஆலோசனை கூட்டம்



இதற்கிடையே, நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆங்கிலேயேர் கால 'ஆர்டர்லி' முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும், ஆர்டர்லி முறை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, வரும் 18க்குள் டி.ஜி.பி., அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news



இந்நிலையில், ஆர்டர்லிகளை திரும்ப பெறுவது தொடர்பாக, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தலைமையில், போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி.,கள் மகேஷ்குமார் அகர்வால், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, 'போலீஸ் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை, உடனடியாக காவல் பணிக்கு அனுப்ப வேண்டும். 'இதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raa - Chennai,இந்தியா
16-ஆக-202213:37:58 IST Report Abuse
Raa ஏன் இவ்ளோ நாள் எப்படி ஒரு நடைமுறை இருப்பது ஐயாவுக்கு தெரியாத என்ன? யாரவது பிரச்னை பண்ணின பாத்துக்கலாம் என தள்ளி போட்டு, இப்ப பண்ண வேண்டிய kattayam vantha piragu....oru medukku order...
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
16-ஆக-202213:35:04 IST Report Abuse
Raa என்
Rate this:
Cancel
14-ஆக-202219:48:39 IST Report Abuse
அப்புசாமி ஏன் ஆர்டர்லிகளை இனிமே வீட்டு வேலை செய்யாதீங்கன்னு சொல்ல மாட்டீரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X