30 லட்சம் பேருக்கு தேசிய கொடி: தமிழக பா.ஜ., வினியோகம்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில், நேற்று தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன. நாடு முழுதும், 75வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நேற்று முதல் நாளை வரை, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு, பொது மக்களை பிரதமர் நரேந்திர மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில், நேற்று தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன.



latest tamil news




நாடு முழுதும், 75வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நேற்று முதல் நாளை வரை, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு, பொது மக்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழக மக்களிடம், தமிழக பா.ஜ., சார்பில் சைக்கிள் பேரணி, வாகன பேரணி, படகு பேரணி, மாரத்தான் போட்டி, ஊர்வலம் என, ஒரு வாரமாக, விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது தவிர, அனைவரும்தேசிய கொடி ஏற்றுவதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், 50 லட்சம் வீடுகளுக்கு கொடிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், மாவட்ட தலைவர்களிடம், கொடிகளை வழங்கினார்.


latest tamil news



நேற்று வரை, 30 லட்சம் வீடுகளுக்கு, பா.ஜ.,வினர் கொடிகளை வழங்கிய நிலையில், தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நேற்று தமிழகத்தில் பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர். காஷ்மீர் மாநில மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த தேசிய கொடியை, கமலாலயத்தில், அண்ணாமலை நாளை ஏற்ற உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-202213:38:30 IST Report Abuse
venugopal s சுதந்திர தினம் முடிந்ததும் நம் மக்கள் அத்தனை கொடிகளையும் குப்பைத் தொட்டியில் வீசி அதன் புனிதத் தன்மையை கெடுக்கப் போகின்றனர். இது தேவையா ?
Rate this:
14-ஆக-202219:47:25 IST Report Abuse
அப்புசாமி,,,,...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202208:15:46 IST Report Abuse
Kasimani Baskaran வாழ்த்துகள்...
Rate this:
Cancel
14-ஆக-202206:44:03 IST Report Abuse
அப்புசாமி எதுவுமே இலவசம் கிடையாது. இந்தக் கொடிக்கான செலவு யார் குடுத்தது? ஆடு வித்து வந்த காசா? பின்னாடி ஓட்டு வாங்க பயன்படும்னுட்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X