தி.மு.க., - எம்.பி.,க்களிடையே கருத்து வேறுபாடு

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: லோக்சபா தி.மு.க., - எம்.பி.,க்களில் சீனியர் டி.ஆர்.பாலு தான். இவருக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி இருக்கிறது. இன்னொரு தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒரு பிரமுகருக்கு ஆதரவாக மற்றொரு கோஷ்டியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.ஒரு கோஷ்டி, 'காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்வதால் தமிழகத்திற்கு என்ன பயன்; வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த காங்., எப்படி உதவும்' என

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: லோக்சபா தி.மு.க., - எம்.பி.,க்களில் சீனியர் டி.ஆர்.பாலு தான். இவருக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி இருக்கிறது. இன்னொரு தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒரு பிரமுகருக்கு ஆதரவாக மற்றொரு கோஷ்டியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.ஒரு கோஷ்டி, 'காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்வதால் தமிழகத்திற்கு என்ன பயன்; வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த காங்., எப்படி உதவும்' என கேள்வி எழுப்புகிறது.



latest tamil news



எனவே, மத்திய அரசை பகைத்துக் கொள்ளாமல், தமிழக நலன் கருதி செயல்பட வேண்டும் என்பது இந்த கோஷ்டியின் கருத்து. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் முதன் முறையாக தி.மு.க., - எம்.பி., ஆனவர்களில் அதிகம் பேர் இந்த கருத்தை ஆதரிக்கின்றனராம்.ஆனால், டி.ஆர்.பாலுவோ பா.ஜ.,வை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்கிறாராம். எதிர் கோஷ்டியினரோ, 'தி.மு.க., என்றைக்கும் பா.ஜ.,விற்கு எதிரான கட்சி தான்; ஆனால், தேவையில்லாமல் பிரதமர் மோடியை விமர்சிக்க வேண்டாம்; இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு நல்லது செய்வோம்' என்கின்றனர்.


latest tamil news



ஆனால், இவர்களின் கருத்தை பாலு ஏற்கவில்லையாம்.'தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்புகிறோம். அதே சமயம் தி.மு.க.,வின் தனித்தன்மையையும் காப்பாற்ற வேண்டும் என நாங்கள் நினைப்பது தப்பா' என எதிர்கோஷ்டி எம்.பி.,க்கள் வருத்தத்துடன் சொல்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202215:24:52 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தூத்துக்குடி எம்.பி.எந்த டீம் இல் இருக்கிறார் ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202212:21:54 IST Report Abuse
duruvasar உண்மையில் இது உல்ட்டாவாக இருக்கிறது. டீ ஆர் பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வரை பிஜேபி க்கு எதிராக உக்கிரமாக இருபதாக தலைமைக்கு காட்டத்தான் இந்த வியூயூகம்.. மதிய அரசுடன் எவ்வளவு இணக்கமாக இருக்கவேண்டும் என்பது ஒரு தொழிலதிபருக்கு தெரியாதா ?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
14-ஆக-202210:42:33 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சும்மா ஜாலியா தில்லி போயிட்டு பெரும்பாலும் பொம்மை மாதிரி உட்கார்ந்துட்டு வர்ற எங்க ஆளுங்களுக்குள்ள புகைச்சல்.. இதை நான் எங்க போயி சொல்லுவேன் ..... விடியல் புலம்பலாக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X