காங்., அடுத்த தலைவர் சோனியாவே!: 2024 வரை நீடிக்க முடிவு: துணைத் தலைவராகிறார் சிதம்பரம்?

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க, வழக்கம்போல் ராகுல், 'கம்பி' நீட்டுவதால், 2024 வரை சோனியாவே அந்த பதவியில் நீடிப்பார் என, தகவல் வெளியாகி உள்ளது. சிதம்பரம், அசோக் கெலாட் ஆகியோர் கட்சியின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் காங்., கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க, வழக்கம்போல் ராகுல், 'கம்பி' நீட்டுவதால், 2024 வரை சோனியாவே அந்த பதவியில் நீடிப்பார் என, தகவல் வெளியாகி உள்ளது.latest tamil news


சிதம்பரம், அசோக் கெலாட் ஆகியோர் கட்சியின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் காங்., கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்றும், கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி துாக்கினர்.

இதையடுத்து உட்கட்சி தேர்தலை நடத்தி நிரந்தர தலைவரை நியமிக்கும் நடவடிக்கைகள், காங்கிரசில் வேகம் எடுத்தன. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க, காங்., மேலிடம் முடிவு செய்தது. இதற்காக விரைவில் காங்., செயற்குழு கூட்டத்தை கூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. காங்., தற்காலிக தலைவரான சோனியா, தன் மகன் ராகுலை நிரந்தர தலைவராக நியமிக்க விரும்புகிறார். கட்சியில் உள்ள ஒரு தரப்பினரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.


ராகுல் தயக்கம்

ஆனால், கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர், ராகுலை தலைவராக ஏற்க தயங்குகின்றனர். 2024ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த நெருக்கடியான நேரத்தில் தலைவர் பதவியை ஏற்க, ராகுல் தயக்கம் காட்டுகிறார். இந்த தகவலை, அவர் தன் தாயாரிடமும் கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, 2024 வரை சோனியாவே காங்., தலைவராக நீடிக்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். காங்கிரசின் உட்கட்சி தேர்தல் விவகாரங்களை கையாளும் மதுசூதன் மிஸ்த்ரி, தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். அப்போது சோனியா, ராகுல் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதால், உட்கட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.மாற்றத்துக்கு திட்டம்

இது குறித்து காங்., வட்டாரங்கள் கூறியதாவது:ராகுலின் தயக்கம் காரணமாக சோனியாவே, 2024 வரை கட்சியின் தலைவராக நீடிக்கவுள்ளார். துணை தலைவர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை நியமிக்க சோனியா விரும்புகிறார்.வட மாநிலங்களுக்கு கெலாட், தென் மாநிலங்களுக்கு சிதம்பரம் என்ற வகையில் இந்த நியமனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், கர்நாடக மாநில காங்., தலைவரான சிவகுமாரை, கட்சியின் தேசிய துணை தலைவராக நியமிக்கும் திட்டமும் உள்ளது. அப்படி அவர் நியமிக்கப்பட்டால், அடுத்தாண்டு நடக்கவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்., முதல்வர் வேட்பாளராக, முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலுக்குப் பின் கட்சியில் முழு அளவிலான நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளவும் சோனியா திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.latest tamil news


சோனியாவுக்கு மீண்டும் கொரோனா

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடந்த ஜூனில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இதையடுத்து, வீட்டிலேயே சோனியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.- புதுடில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
15-ஆக-202203:18:21 IST Report Abuse
அன்பு காங்கிரஸ் கட்சியா? அது எந்த நாட்டில் இருக்கிறது?
Rate this:
Cancel
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
14-ஆக-202218:24:05 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy தமிழக காங். கட்சியின் தலைவராக 101% தான் வருவதாக சிதம்பரமே கூறியிருந்த நிலையில் இந்தச் செய்தி. மாநிலக் கிளையை அழிப்பதைவிட தேசியத் தலைமையை காலி செய்யும் மிகப்பெரிய தகுதி இவருக்கு இருப்பதாக கட்சியே நினைக்கிறபோது நாம் எதுவும் சொல்ல முடியாது...ஆல் தி பெஸ்ட் தவிர.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
14-ஆக-202214:32:53 IST Report Abuse
Vena Suna சோனியாவின் தலைமை அலுவலகம் திஹாரில் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X