மாமல்லையில் சர்வதேச காற்றாடி விழா துவக்கம்: மக்கள் உற்சாகம்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மாமல்லபுரம்-மாமல்லபுரம் கடலோர பகுதியில், சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே வானில் வர்ணஜாலம் காட்டிய காற்றாடிகளை, பார்வையாளர்கள் பார்த்து அதிசயித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், சர்வதேச கவனம் பெற்றுள்ளதால், இப்பகுதியை மேம்படுத்த, தமிழக சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.அதற்கேற்ப, 'குளோபல் மீடியா பாக்ஸ்' நிறுவனத்துடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாமல்லபுரம்-மாமல்லபுரம் கடலோர பகுதியில், சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே வானில் வர்ணஜாலம் காட்டிய காற்றாடிகளை, பார்வையாளர்கள் பார்த்து அதிசயித்தனர்.



latest tamil news


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், சர்வதேச கவனம் பெற்றுள்ளதால், இப்பகுதியை மேம்படுத்த, தமிழக சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.அதற்கேற்ப, 'குளோபல் மீடியா பாக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச காற்றாடி திருவிழாவை, தமிழகத்தில் முதல்முறையாக நடத்துகிறது.மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதி, மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக, கடலோர திறந்த வெளி பகுதியில், இவ்விழா நேற்று துவங்கியது.சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சர் அன்பரசன், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சர்வதேச காற்றாடிதிருவிழாவை நேற்று துவக்கினர்.இந்தியாவிலிருந்து தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, புதுடில்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் 10 குழுவினர் பங்கேற்று உள்ளனர். இவர்கள் 80 முதல் 100 காற்றாடிகளை பறக்கவிட்டனர். வசீகர வடிவங்களிலும், வண்ணங்களிலும், வானில் வர்ணஜாலத்துடன் பறந்த காற்றாடிகள், காண்போரைகவர்ந்தன.குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகள், திருவள்ளுவர் மற்றும் கார்ட்டூன் உருவங்கள் என, குழந்தை மனம் கவர்ந்த வடிவங்களில், காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன.

விழாவை துவக்கி வைத்த பின் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:தமிழகத்தில் முதல் முறையாக, காற்றாடி திருவிழா நடத்துகிறோம். மாலை 6:00 மணி வரை, பல நாட்டு காற்றாடிகள் பறக்கவிடப்படும். இரவில் இசை, கலை நிகழ்ச்சி நடத்தப்படும். இது போட்டியல்ல; பார்வையிட மட்டுமே நடத்தப்படுகிறது. வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்து நடத்தப்படும்.


latest tamil news


மெக்சிகோ நாட்டு வெப்பகாற்று பலுான் விழாவில், இந்தியா சார்பில், நாம் மட்டுமே பங்கேற்றோம். அதேபோன்ற விழாவை, பொள்ளாச்சியில் நடத்த முடிவெடுத்துள்ளோம்.முதல்வர் அறிவித்துள்ள, சுற்றுலா பகுதி மேம்பாட்டு திட்டத்தில், 10 சுற்றுலா இடங்கள் மேம்படுத்தப்படும்.மத்திய அரசின் திட்டத்தில், ராமேஸ்வரத்தில், சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. மாமல்லபுரம், 'ஐகானிக் சிட்டி' திட்டத்திற்கு, மத்திய அரசிடம் 467 கோடி ரூபாய் கேட்டு, எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.


இசை கச்சேரி இருக்கு!

காற்றாடி திருவிழாவை காண, நுழைவுக்கட்டணம், 150 ரூபாய். www.tnikf.com என்ற இணையதளத்தில் செலுத்தலாம். விழா பகுதியிலும், நேரடியாக நுழைவுச்சீட்டு பெறலாம். காற்றாடிகள் பறப்பதை மட்டுமே காண முடியும். குழந்தைகளுக்கு இலவசம்.மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, கலை, இசை நிகழ்ச்சிகள் உண்டு. இன்று, ராஜேஷ் வைத்யாவின் இசை கச்சேரி நடக்கிறது.நாளை, சுதந்திர தின சிறப்பு கொண்டாட்டம் நடக்கிறது. இதை காண, தலா 500 ரூபாய், 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என, வெவ்வேறு கட்டணம் உண்டு. பல வகையான உணவக, தின்பண்டங்களுக்கு 50 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற உபகரணங்களும் உள்ளன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
14-ஆக-202211:19:19 IST Report Abuse
Desi "குளோபல் மீடியா பாக்ஸ்" நிறுவனம் யாரோடது?
Rate this:
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-ஆக-202213:50:45 IST Report Abuse
Ramesh Sargamஇந்த 'குளோபல் மீடியா பாக்ஸ்' ஒரு கிறிஸ்துவருடையது. எங்கோ உதைக்கிறது அல்லவா...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X