இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': கடனை திருப்பி கேட்டவர் கைவிரல் கடித்து துண்டிப்பு

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள் காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு4 அரசு ஊழியர்கள் அதிரடி 'டிஸ்மிஸ்' ஸ்ரீநகர்-நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்துக்காக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீனின் மகன் உட்பட நான்கு அரசு ஊழியர்களை, ஜம்மு - காஷ்மீர் அரசு நேற்று 'டிஸ்மிஸ்'


இந்திய நிகழ்வுகள்காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு4 அரசு ஊழியர்கள் அதிரடி 'டிஸ்மிஸ்'


ஸ்ரீநகர்-நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்துக்காக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீனின் மகன் உட்பட நான்கு அரசு ஊழியர்களை, ஜம்மு - காஷ்மீர் அரசு நேற்று 'டிஸ்மிஸ்' செய்தது.

ஜம்மு - காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, அரசு ஊழியர்கள் யாரேனும் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவுகின்றனரா என, அரசு தீவிர விசாரணையில் ஈடுபட்டது. இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான சையத் சலாவுதீனின் மகன் சையத் அப்துல் முயீத், ஹிந்துக்களை கொன்ற வழக்கில் சிறையில் உள்ள பரூக் அகமது தர்ரின் மனைவி, காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முஹீத் அகமது மற்றும் மஜித் ஹுசைன் காத்ரி ஆகியோர் சிக்கினர்.இவர்கள் அனைவரும் பயங்கரவாத இயக்கங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தனர்.latest tamil news
பிரிவினைவாத, பயங்கரவாத நிகழ்ச்சிகளை பிரசாரம் செய்தல், பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தல், போலி 'பாஸ்போர்ட்'கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இவர்களை ஜம்மு - காஷ்மீர் அரசு உடனடியாக பணி நீக்கம் செய்தது. இவர்கள் அனைவரும் அரசின் முக்கிய பதவிகளை வகித்து வந்தவர்கள். ஜம்மு - காஷ்மீரில், சட்ட விரோத செயல்களுக்காக, அரசுப் பணிகளில் இருந்து இதுவரை 40 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்லாரியை பிடித்த பா.ஜ.,வினர் கைது:ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு


பொள்ளாச்சி:அதிகளவு கருங்கற்கள் ஏற்றிவந்த லாரி மீது கல் வீசிய பா.ஜ., நகர தலைவர் உள்ளிட்ட மூன்று பேரை கிழக்கு போலீசார் கைது செய்ததை கண்டித்து, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஜமீன் முத்துாரில் இருந்து நேற்று முன்தினம் அதிகளவில் கருங்கற்கள் ஏற்றிவந்த இரு லாரிகளை காந்தி சிலை அருகே பா.ஜ.,வினர் சிறைபிடித்தனர். அப்போது, லாரியின் முன்பக்க கண்ணாடி மீது கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.இதையடுத்து, கேரளா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜோபி, 40, லாரி உரிமையாளர் அபிலாஸ் உடன் வந்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில், பா.ஜ., நகர தலைவர் பரமகுரு, 36, பா.ஜ., பிரமுகர்கள் சபரி, 25, செந்தில், 38 ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், வாகனத்தை சேதப்படுத்துதல், அனுமதியின்றி ஒன்றாக கூடுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் வசந்தராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,''கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் கடத்துவது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போலீசார் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது. அவர்களது அலட்சியத்தால் தான் கடத்தல் தொடர்கிறது. இதுகுறித்து நீதிமன்றத்துக்கு செல்வோம். பா.ஜ., நிர்வாகிகள் மூவரை கைது செய்ததால் அச்சமடைந்துவிடுவோம் என நினைக்க வேண்டாம்; 300 பேர் களத்தில் இறங்குவர்,'' என்றார்.


ரூ.11.41 கோடி போதை பொருள் கடத்திய அங்கோலா பெண் கைதுசென்னை:அங்கோலா நாட்டில் இருந்து, 11.41 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்த பெண்ணை,சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை வழியாக, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தொடர்கிறது. அதனால், சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எத்தியோப்பிய நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து, 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் வந்த பயணியரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அங்கோலா நாட்டைச் சேர்ந்த பிபியனா டா கோஸ்டா, 59, என்ற பெண், சுற்றுலா வந்துள்ளதாக தெரிவித்தார். அவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள், அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக சோதித்தனர்.

அப்போது, அப்பெண்ணின் கைப்பையில், 1.183 கிலோ 'கொகைன்' போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு 11.41 கோடி ரூபாய். அப்பெண்ணை கைது செய்து நடத்திய விசாரணையில், இவர் சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.


கடனை திருப்பி கேட்டவர் கைவிரல் கடித்து துண்டிப்பு


உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட முதியவரின் கை விரலைக் கடித்து துண்டாக்கிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஈஸ்வரகண்டநல்லுாரைச் சேர்ந்தவர் சுந்தரம், 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 40; இவர், சுந்தரத்திடம், 12 ஆயிரத்து 500 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.அந்த பணத்தை திருப்பி தருவதில் ஏகாம்பரம் காலம் தாழ்த்தி வந்தார்.

கடந்த, 8ம் தேதி கெடிலத்தில் இருந்து ஈஸ்வரகண்டநல்லுாருக்கு மினி பஸ்சில் சென்றபோது, ஏகாம்பரத்திடம், பணத்தை திருப்பித் தரும்படி சுந்தரம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஈஸ்வரகண்டநல்லுார் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஏகாம்பரம் ஆத்திரமடைந்து, சுந்தரத்தின் வலது கை சுண்டு விரலைக் கடித்து துண்டாக்கினார். உடன், சுந்தரம், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சுந்தரம் மகன் முருகன் அளித்த புகாரில், திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து, ஏகாம்பரத்தை கைது செய்தனர்.


latest tamil news

துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ., தற்கொலை


தென்காசி:ஓய்வு பெற்ற நீதிபதி பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் எஸ்.ஐ. குற்றால விடுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசு அறிவித்த ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார். இவர் நேற்று முன்தினம் குற்றாலம் வந்திருந்தார். பழைய குற்றாலம் சாலையில் உள்ள இசக்கி ரிசார்ட்ஸ் விடுதியில் தங்கி இருந்தார். அவருக்கு பாதுகாப்பிற்காக சென்னை ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. பார்த்திபன் 50 வந்திருந்தார்.

நேற்று காலை 6:30 மணிக்கு தனது அறை பாத்ரூமில் போலீஸ்காரர் பார்த்திபன் பிஸ்டல் துப்பாக்கியால் மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ் விசாரித்தார். பார்த்திபன் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர். டிப்ளமோ படித்தவர். மனைவி தீபா மகன் யுவராஜ் 17 மகள் கேஷிகா 13 உள்ளனர். சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாகவும் குறிப்பாக மனநலம் தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


தேசிய கொடி அவமதிப்பு: கலெ க்டர் பி.ஏ., ‛சஸ்பெண்ட்'பெரம்பலுார்:-தேசியக்கொடியை தலைகீழாக பிடித்து, அவமரியாதை செய்த அரியலுார் கலெக்டரின் உதவியாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரியலுார் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட நிலை அலுவலர்களுக்கு, தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு, தேசியக்கொடியை பிடித்தவாறு போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர்.

அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சம்பத், தேசியக்கொடியை தலைகீழாக பிடித்தவாறு நின்றார். அருகில் இருந்தவர்கள் கூறியதை தொடர்ந்து, கொடியை நேராக பிடித்தார்.

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, தேசியக் கொடியை அவமதித்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் சம்பத் சஸ்பெண்ட் செய்யயப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202216:46:27 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரே நாளில் மூன்று போலீசார்😪 தற்கொலை. விடியலில்..
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
14-ஆக-202202:47:45 IST Report Abuse
chennai sivakumar நாட்டின் தேசிய கொடியை கூட சரியாக பிடிக்க தெரியாத இவர் எல்லாம் அரசு ஊழியர். அதுவும் ஆட்சியரின் PA. Vetkak கெடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X