இது உங்கள் இடம்: ஆன்லைன் தடைச் சட்டம் கானல் நீர் தான்| Dinamalar

இது உங்கள் இடம்: ஆன்லைன் தடைச் சட்டம் கானல் நீர் தான்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (17) | |
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தமிழகத்தில் இதுவரை, ௩௦க்கும் மேற்பட்டோர் உயிரை விட்டுள்ளனர். அவர்களில் சிலர் குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளனர். யார் யாரெல்லாம், 'ஆண்ட்ராய்டு' போன் வைத்திருக்கின்றனரோ, அவர்களுக்கு, 'ஆன்லைன் ரம்மி' எனும் சூதாட்டத்தை நடத்தும் நிறுவனங்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தமிழகத்தில் இதுவரை, ௩௦க்கும் மேற்பட்டோர் உயிரை விட்டுள்ளனர். அவர்களில் சிலர் குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளனர்.




latest tamil news


யார் யாரெல்லாம், 'ஆண்ட்ராய்டு' போன் வைத்திருக்கின்றனரோ, அவர்களுக்கு, 'ஆன்லைன் ரம்மி' எனும் சூதாட்டத்தை நடத்தும் நிறுவனங்கள், தினமும் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றன.



அதில், 'உங்கள் கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைத்திருக்கிறோம். அதை முதலீடாக வைத்து, ஆன்லைனில் ரம்மி ஆடி, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் வென்று மகிழுங்கள்' என்று தெரிவிப்பர். இந்த குறுஞ்செய்திகளை நாம் அலட்சியம் செய்ய செய்ய, நம் கணக்கில் வரவு வைத்திருப்பதாக சொல்லப்படும் தொகை உயர்ந்து கொண்டே வரும். உயர்த்தி கொண்டு வருவதற்கு காரணம், நம்மை வலையில் சிக்க வைத்து, உயிரையும், பணத்தையும் பறிக்கவே.



ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ, பல நாடுகளில் சட்டங்கள் இயற்றி இருக்கின்றனர்; ஆனால், தமிழகத்தில் இல்லை. அதே நேரத்தில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, புதிய சட்டம் இயற்ற, தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டு குறித்து கருத்து சொல்ல, பொது மக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. கருணாநிதி சமாதியை அழகுபடுத்தவோ, கடலில் பேனா சிலை வைக்கவோ, பொது மக்களிடம் கருத்து எதுவும் கேட்கமில்லை; கேட்கவும் மாட்டார்கள். ஆனால், ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கருத்து கேட்கின்றனர்.


latest tamil news



அதாவது, அடிப்பது மாதிரி அடிக்க வேண்டும்; வலிப்பது மாதிரியும் இருக்கக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையில், முதலில் ஆன்லைன் சூதாட்டம் பற்றி பரிசீலிக்க குழு அமைத்தனர். தற்போது, பொதுமக்கள் கருத்து சொல்ல அழைப்பு விடுத்துள்ளனர். போகிற போக்கை பார்த்தால், இப்போதைக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, தமிழக அரசு சட்டம் இயற்றாது என்றே தோன்றுகிறது.

இந்த திராவிட மாடலில், ஆன்லைன் சூதாட்டமும் ஒரு அங்கம் போலும். ஒருவேளை இந்த சூதாட்டங்களை, உடன்பிறப்புகள் தான் மறைந்து நின்று நடத்துகின்றனரோ என்னவோ? இல்லையெனில், மக்களின் உயிரை விட கலெக்ஷனே முக்கியம் என, திராவிட மாடல் அரசு நினைக்கிறதோ என்னவோ? இந்த விவகாரத்தில் குழு, கருத்து என, தமிழக அரசின் நடவடிக்கை நீண்டு கொண்டே இருப்பதைப் பார்க்கும் போது, ஆன்லைன் தடை சட்டம் கானல் நீர் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X