தேசிய கொடி ஏந்தி 75 நிமிடம் கடலில் மிதந்த சமூக ஆர்வலர்

Added : ஆக 14, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம் : நாட்டின், 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடலில், சமூக ஆர்வலர் ஒருவர், 75 நிமிடம் தேசிய கொடியை ஏந்தியபடி மிதந்தார்.சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட பிரதமர் மோடி வலியுறுத்தியதால், நேற்று முதல் நாடு முழுதும் வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகளில் தேசிய கொடியை ஏற்றி மக்கள் கொண்டாடி
தேசிய கொடி ஏந்தி 75 நிமிடம் கடலில் மிதந்த சமூக ஆர்வலர்


ராமேஸ்வரம் : நாட்டின், 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடலில், சமூக ஆர்வலர் ஒருவர், 75 நிமிடம் தேசிய கொடியை ஏந்தியபடி மிதந்தார்.சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட பிரதமர் மோடி வலியுறுத்தியதால், நேற்று முதல் நாடு முழுதும் வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகளில் தேசிய கொடியை ஏற்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், யோகா பயிற்றுனருமான சுடலை, 60, நேற்று ராமநாதசுவாமி கோவில், அக்னி தீர்த்த கடலில், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, இரு கையிலும் தேசிய கொடியை ஏந்தியபடி, 75 நிமிடம் கடலில் மிதந்து சாதித்தார். சுடலையின் தேசப்பற்றுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X