எருதுகட்டு விழா அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்

Added : ஆக 14, 2022 | |
Advertisement
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே பரனுாரில் எருதுகட்டு விழாவிற்கு அனுமதி கோரிய மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் அதே நிவாரணம் கோரி மனு செய்தவருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை உயர்நீதிமன்ற கிளையல், பரனுார் பாலமுருகன் தாக்கல் செய்த மனு:அவரேந்தல் அருகே பரனுாரில் எருதுகட்டு திருவிழா
எருதுகட்டு விழா அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்


மதுரை : ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே பரனுாரில் எருதுகட்டு விழாவிற்கு அனுமதி கோரிய மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் அதே நிவாரணம் கோரி மனு செய்தவருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையல், பரனுார் பாலமுருகன் தாக்கல் செய்த மனு:அவரேந்தல் அருகே பரனுாரில் எருதுகட்டு திருவிழா நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்கக்கோரி ராமநாதபுரம் எஸ்.பி., திருப்பாலைக்குடி போலீசில் மனு அளித்தோம்; நிராகரிக்கப்பட்டது.அதை ரத்து செய்து மனுவை பரிசீலித்து அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுசெய்தார்.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு:மனுதாரர் இதுபோல் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்து தள்ளுபடியானது இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மே மாதத்திற்கு பின் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த சட்டப்படி தடை உள்ளது.வெவ்வேறு வழக்கறிஞர்கள் மூலம் வெவ்வேறு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது, மனுதாரரின் யதேச்சதிகார மனப்பான்மை, நடத்தையை காட்டுகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது.சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது மனுதாரரின் நோக்கம்.இந்நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் மற்றும் தொந்தரவு செய்யும் நோக்குடன் மனு செய்துள்ளார்.

மனுவை தள்ளுபடி செய்கிறோம்.அவர் 1 லட்சம் ரூபாயை, உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு செலுத்த வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆக., 26க்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X