'ஈஷா' செலுத்த வேண்டிய கட்டணம்; மத்தியஸ்த தீர்ப்பாய உத்தரவு ரத்து

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, கோவை ஈஷா பவுண்டேஷன் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக, மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.கோவை ஈஷா பவுண்டேஷன், 2.50 கோடி ரூபாய் தொலைபேசிகட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, அதற்கான ரசீதுகளை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அனுப்பியது.இதை எதிர்த்து, ஈஷா பவுண்டேஷன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு
'ஈஷா' செலுத்த வேண்டிய கட்டணம்;  மத்தியஸ்த தீர்ப்பாய உத்தரவு ரத்து


சென்னை : பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, கோவை ஈஷா பவுண்டேஷன் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக, மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கோவை ஈஷா பவுண்டேஷன், 2.50 கோடி ரூபாய் தொலைபேசிகட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, அதற்கான ரசீதுகளை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அனுப்பியது.இதை எதிர்த்து, ஈஷா பவுண்டேஷன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, 'ஆர்பிட்ரேஷன்' எனப்படும் மத்தியஸ்தர் விசாரணைக்கு, உயர் நீதிமன்றம்அனுப்பியது.

வழக்கை விசாரித்த, மத்தியஸ்த தீர்ப்பாயம், பி.எஸ்.என்.எல்., கோரிய கட்டண தொகையை ரத்து செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முறையீடு செய்தது. மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், விசாரணைக்குவந்தது.பி.எஸ்.என்.எல்., சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும்வழக்கறிஞர் பிரியகுமார் ஆஜராகினர்.

தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்புகள் ஈஷா மைய நிலையத்தில் பதிவாகி விட்டால், அதை மறுக்க முடியாது என்றும், முக்கிய ஆவணங்களை மத்தியஸ்தர் கணக்கில் கொள்ளவில்லை என்றும், மூத்த வழக்கறிஞர்வில்சன் வாதாடினார்.ஈஷா மையம் தரப்பில், 'இவ்வளவு அதிக எண்ணிக்கையில், அழைப்புகள் அனுப்ப வாய்ப்பு இல்லை. அதனால், இவ்வளவு தொகையை செலுத்த வேண்டியது இல்லை' என தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மத்தியஸ்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக விசாரணை நடத்த, மத்தியஸ்தருக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
14-ஆக-202211:59:32 IST Report Abuse
Dharmavaan ஆர்பிட்ரேஷன் க்கு அனுப்பிய இதே உயர் நீதிமன்றம் அதற்கு மதிப்பளிக்காமல் தள்ளுபடி செய்தது என்ன நியாயம் எங்கோ இடிக்கிறது
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-202209:58:25 IST Report Abuse
HONDA இவனுங்ளால தான் BSNL pensionerukku கூட பே Commission பிக்ஸ் பண்ண முடியாத நிலையில் உள்ளது நீதிமன்றம் கடவுள் பெயரை சொல்லி வியாபாரம் பன்றவனை ஆதரிக்கிறதா
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஆக-202209:11:06 IST Report Abuse
Sampath Kumar ஆக எதை தவறா வேற யாரவது செய்து இருந்தால் விழுந்து பிராண்டி இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X