ரூ.100 கோடி அடமான பத்திரங்கள் மீட்பு; திருச்சி பைனான்சியர் மகன்களுடன் கைது| Dinamalar

ரூ.100 கோடி அடமான பத்திரங்கள் மீட்பு; திருச்சி பைனான்சியர் மகன்களுடன் கைது

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (1) | |
திருச்சி : திருச்சி பைனான்சியர் வீட்டில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை பறிமுதல் செய்த போலீசார், பைனான்சியர், அவரது இரு மகன்களை கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், லால்குடி, திருவள்ளூர் நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன், 65; இவர் பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த லால்குடி நகராட்சி, 9வது வார்டு கவுன்சிலரான ஆறுமுகம், இரண்டு
ரூ.100 கோடி அடமான பத்திரங்கள் மீட்பு;  திருச்சி பைனான்சியர் மகன்களுடன் கைது



திருச்சி : திருச்சி பைனான்சியர் வீட்டில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை பறிமுதல் செய்த போலீசார், பைனான்சியர், அவரது இரு மகன்களை கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், லால்குடி, திருவள்ளூர் நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன், 65; இவர் பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.



அதே பகுதியைச் சேர்ந்த லால்குடி நகராட்சி, 9வது வார்டு கவுன்சிலரான ஆறுமுகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 6 ஏக்கர் விவசாய நில பத்திரங்களை அடமானமாக வைத்து, 1.30 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.தற்போது, அசலும், வட்டியும் சேர்த்து, 2.20 கோடி ரூபாய் கொடுத்தால் தான், நிலப் பத்திரங்களை கொடுக்க முடியும், என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.



இது குறித்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமாரிடம், ஆறுமுகம் புகார் அளித்தார். இதேபோல், லால்குடி, பெருவெள்ளநல்லுார், வெள்ளனுார், புள்ளம்பாடி, இடையாற்று மங்கலம், ஆங்கரை போன்ற பகுதிகளில் உள்ள, 100-க்கும் மேற்பட்டோர், நிலப்பத்திரங்களை அடமானமாக வைத்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர்.அவர்களிடமும், விஸ்வநாதன் தரப்பினர் வட்டி கேட்டு மிரட்டி உள்ளனர்.



இது குறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் டி.ஜி.பி., அலுவலகம், திருச்சி கலெக்டர், ஐ.ஜி., உள்ளிட்டோருக்கு புகார்கள் வந்துள்ளன.திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார் உத்தரவின்படி, ஏ.டி.எஸ்.பி., குந்தலிங்கம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம், திருவள்ளுவர் நகரில் உள்ள விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடத்தினர்.



இதில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில அடமான பத்திரங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், விஸ்வநாதன் மற்றும் அவரது மகன்கள் விவேக், 40, வினோத், 37, ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X