இதென்ன ஜீபூம்பா தலையா: அரசுக்கு பழனிசாமி கேள்வி| Dinamalar

இதென்ன ஜீபூம்பா தலையா: அரசுக்கு பழனிசாமி கேள்வி

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (16) | |
சென்னை : ''நான் சாப்ட் முதல்வர் அல்ல; சர்வாதிகாரி என வசனம் பேசுவதை நிறுத்தி விட்டு இளைஞர் சமுதாயத்தை போதை பிடியில் இருந்து மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும்' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:'நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்' என்ற திரைப்படப் பாடலை யாரோ ஒருவர் முதல்வருக்கு சொல்லிக்
ஜீபூம்பா தலையா, பழனிசாமி, ஸ்டாலின், போதைப் பொருள் கடத்தல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : ''நான் சாப்ட் முதல்வர் அல்ல; சர்வாதிகாரி என வசனம் பேசுவதை நிறுத்தி விட்டு இளைஞர் சமுதாயத்தை போதை பிடியில் இருந்து மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும்' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:'நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்' என்ற திரைப்படப் பாடலை யாரோ ஒருவர் முதல்வருக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும்.ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை மக்களை ஏமாற்றும் வகையில் தினம் ஒரு அறிவிப்பு அடிக்கடி குழுக்கள் அமைத்தல் என பொம்மலாட்ட நாடகங்களை அரங்கேற்றி வருவது கண்டு எள்ளி நகையாடுகின்றனர்.ஆட்சியாளர்கள் போடும் இரட்டை வேடத்தால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களால் இளைஞர் சமுதாயம் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.


latest tamil newsபெரும்பாலான பள்ளி மற்றும் கல்லுாரி வாசல்களில் கஞ்சா வியாபாரிகள் சிறு சிறு பொட்டலங்களாக விற்பது கண்கூடான ஒன்று.தி.மு.க. அரசு பதவியேற்றதில் இருந்து மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதும் அவர்களை மீட்க முடியாமல் பெற்றோர் தவிப்பதும் தொடர்கிறது.பெற்றோர் அரசை நம்பாமல் எப்போதும் தங்கள் குழந்தைகளின் மீது முழு கவனத்தை செலுத்த வேண்டும். தவறான பாதைக்கு அவர்களை செல்ல விடாமல் கண்காணிக்க வேண்டும்.சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் எதிரிலேயே மெரினா பீச்சில் கள்ளச்சாராயம் பிடிபட்டது. இதன் பின்னணி இதுவரை தெரியவில்லை. டி.ஜி.பி. உத்தரவின்படி சில நேர்மையான காவலர்கள் கஞ்சா வேட்டையில் ஈடுபடும்போது ஒரு சில ஆளும் கட்சியினர் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மிரட்டுவதால் தொடர் நடவடிக்கையில் போலீசாரால் ஈடுபட முடியவில்லை.காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை பிடிப்பதாக கடத்தியவர்களை கைது செய்வதாக செய்திகள் வருகின்றன. ஆனால் வெட்ட வெட்ட முளைப்பதற்கு இது என்ன ஜீ பூம்பா தலையா? எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழி முதல்வருக்கு தெரியாதா?கஞ்சா கடத்தலுக்கு மூலக் காரணம் யார்; யாரை பிடித்தால் இது குறையும் எனத் தெரியாதா?போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும். 'நான் சாப்ட் முதல்வர் அல்ல; சர்வாதிகாரி' என வசனம் பேசுவதை நிறுத்தி விட்டு இளைஞர் சமுதாயத்தை போதை பிடியில் இருந்து மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X