25 சதவீதம் கமிஷன் கேட்பது முதல்வருக்கு தெரியுமா: பா.ஜ., | Dinamalar

25 சதவீதம் கமிஷன் கேட்பது முதல்வருக்கு தெரியுமா: பா.ஜ.,

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (28) | |
சென்னை : 'உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்துவதாக கூறி கொள்ளும் முதல்வர் ஸ்டாலினுக்கு, 'டெண்டரில்' 25 சதவீதம் கமிஷன் கேட்பது தெரியுமா, தெரியாதா?' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக, 2006 முதல், 2011 வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அப்போது தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அறிமுகம்
25 சதவீதம், கமிஷன், பா.ஜ., தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : 'உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்துவதாக கூறி கொள்ளும் முதல்வர் ஸ்டாலினுக்கு, 'டெண்டரில்' 25 சதவீதம் கமிஷன் கேட்பது தெரியுமா, தெரியாதா?' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.



அவரது அறிக்கை:முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக, 2006 முதல், 2011 வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அப்போது தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பின் நிறுத்தப்பட்டது.ஸ்டாலின், 15 மாத ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் நடக்கும் என்று சட்டசபையில் அறிவித்தார்.



latest tamil news



இத்திட்டத்திற்கு செலவழிக்கப்படும் நிதியில், 75 சதவீதம் மத்திய அரசின் நிதி.இத்திட்டம், 2006 - 2011 வரை பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கலெக்டர் நிதியை ஒதுக்கீடு செய்வார். தற்போது, அத்திட்டம் சட்டசபையில் அறிவித்தத்தோடு சரி; தமிழகம் முழுதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஊராட்சி தலைவர் தலைமையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு எதிராக, கலெக்டர் விருப்பப்படி, ஊர் தேர்வு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்படுவதால், தமிழகம் முழுதும் போராட்டம் நடக்கிறது.



உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்துவதாக கூறி கொள்ளும் முதல்வருக்கு, 'டெண்டரில்' 25 சதவீதம் கமிஷன் கேட்பது தெரியுமா, தெரியாதா?அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? இத்திட்டம் காலதாமதம் ஆவதை முதல்வர் தடுக்க முன்வருவாரா? செய்யும் தவறை மறைக்க மத்திய அரசின் பெயரை பயன்படுத்துவது தான் திராவிட மாடல் அரசா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X