சாணார்பட்டி அருகே அம்மன் சிலை உடைப்பு

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திண்டுக்கல் : சாணார்பட்டி அருகே கூவனுாத்து பத்திரகாளி அம்மன் கோவில் அம்மன் சிலை விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கூவனுாத்து செங்குளத்தின் கரையில் உள்ளது பத்திரகாளி அம்மன் கோவில். கவராயப்பட்டி கிராம மக்களால் நிறுவப்பட்ட இக்கோவிலில், நேற்று முன்தினம் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகளை, பூஜாரிகள் சுப்பிரமணி, குப்புசாமி நடத்தினர்.இரவில் கோவிலை பூட்டி
சாணார்பட்டி அருகே  அம்மன் சிலை உடைப்பு



திண்டுக்கல் : சாணார்பட்டி அருகே கூவனுாத்து பத்திரகாளி அம்மன் கோவில் அம்மன் சிலை விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கூவனுாத்து செங்குளத்தின் கரையில் உள்ளது பத்திரகாளி அம்மன் கோவில். கவராயப்பட்டி கிராம மக்களால் நிறுவப்பட்ட இக்கோவிலில், நேற்று முன்தினம் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகளை, பூஜாரிகள் சுப்பிரமணி, குப்புசாமி நடத்தினர்.இரவில் கோவிலை பூட்டி சென்றனர்.

நேற்று காலை அம்மன் சிலை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சிலையை உடைத்தவர்கள் ஒரு காகிதத்தில், குறிப்பிட்ட ஜாதி பற்றி தகாத வார்த்தைகளில் எழுதி, அப்பகுதி இளைஞர் ஒருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.சாணார்பட்டி போலீசார், அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பெயர் எழுதப்பட்டிருந்த இளைஞரிடமும் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Chennai,இந்தியா
14-ஆக-202209:28:08 IST Report Abuse
Vijay இந்த ஆட்சியில் சிலை உடைக்கபடவில்லை என்றால் தான் அதிசியம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202207:35:19 IST Report Abuse
duruvasar சட்டம் ஒழுங்கு பற்றி தனக்கு தானே சபாஷ் போட்டுகொள்ளும் ஸ்டாலினுக்கு இந்த மாதிரியான தொடர் நிகழ்வுகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக தெரியவில்லையா ? இனிமேலாவது காவல்துறை தலைவரும், ஸ்டாலினும் பொதுவெளியில் நாணமின்றி மார்தட்டி கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X