கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே; அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் 'குட்டு'

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (48+ 17) | |
Advertisement
சென்னை : 'கோவில் சொத்தை, அறநிலையத் துறை சொத்தாக கருதக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு:கோவில்களுக்கு நன்கொடையாக, சொத்துக்களை பக்தர்கள் அளிக்கின்றனர். அதனால், கோவில் சொத்துக்களை, அறநிலையத் துறை சொத்துக்களாக கருத முடியாது. அவை எல்லாம் கோவில் சொத்துக்களாகவே
கோவில் சொத்துக்கள், அறநிலையத் துறை, ஐகோர்ட்,


சென்னை : 'கோவில் சொத்தை, அறநிலையத் துறை சொத்தாக கருதக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு:கோவில்களுக்கு நன்கொடையாக, சொத்துக்களை பக்தர்கள் அளிக்கின்றனர்.

அதனால், கோவில் சொத்துக்களை, அறநிலையத் துறை சொத்துக்களாக கருத முடியாது. அவை எல்லாம் கோவில் சொத்துக்களாகவே இருக்க வேண்டும். ஆனால், தங்களின் சொத்துக்களாக அறநிலையத் துறை கருதுகிறது.அறங்காவலர்களுடன்ஆலோசிக்காமல், கோவில் சொத்துக்களின் உரிமையை மாற்றுகின்றனர்.அறங்காவலர்களின் ஒப்புதல் இன்றி, கோவில் சொத்துக்களை மாற்றம் செய்யக் கூடாது; கோவில் சொத்துக்களை, அறநிலையத் துறை சொத்துக்களாக, கோவில்களை அறநிலையத் துறை கோவில்களாக உரிமை கோருவதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகினர்.கமிஷனருக்கு அதிகாரம்முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:ஹிந்து அறநிலையத் துறை சட்டத்தில், கோவில் மற்றும் மத அறக்கட்டளைகள் தொடர்பாக, கமிஷனருக்கு உள்ள அதிகாரம் மற்றும் கடமைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. கோவிலுக்கு அவசியமானதாக, பயனுள்ளதாக இருந்தால் ஒழிய, கமிஷனரின் ஒப்புதல் இன்றி, கோவில் மற்றும் மத நிறுவனங்களின் சொத்துக்களை குத்தகைக்கு, வாடகைக்கு என மாற்ற முடியாது.

உதாரணத்துக்கு, கோவிலுக்கு சொந்தமான நிலம் அல்லது கட்டடத்தை, ஐந்து ஆண்டுக்கு மேல் குத்தகை விட்டு வாடகை ஈட்டினால், அதை பயனுள்ளதாக கூற முடியும்.அறநிலையத் துறை கமிஷனர் ஒப்புதல் வழங்குவதற்கு முன், அந்தச் சொத்து தொடர்பாக ஆட்சேபனைகள், பரிந்துரைகளை பெற வேண்டும்.


latest tamil news

ஆட்சேபனை இருந்தால்...


ஆட்சேபனைகளை, கோவில் அறங்காவலர்கள் மட்டுமின்றி, அதில் ஆர்வம் உடைய மற்றவர்களும் தெரிவிக்கலாம். அவற்றை, கமிஷனர் பரிசீலிக்க வேண்டும். எனவே, சொத்துக்களை குத்தகைக்கு, வாடகைக்கு விடுவதற்காக மாற்றம் செய்ய வேண்டுமானாலும் கூட, தேவைப்படும்போது பயன் ஏற்படுகிறது என்றால் மட்டுமே, கமிஷனர் அதை மேற்கொள்ளலாம்.

அதேநேரத்தில், சொத்து மாற்றம் தொடர்பாக, ஆட்சேபனைகள், பரிந்துரைகள் கோரி விளம்பரம் வெளியிடும்போது, அறங்காவலர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்.கோவில் சொத்தில் மாற்றம் மேற்கொள்ள, அறநிலையத் துறை கமிஷனருக்கு அதிகாரம் இருக்கும் வேளையில், அந்தச் சொத்தை, அறநிலையத் துறையின் சொத்தாக கருதக் கூடாது; அது கோவில் சொத்து தான். சொத்து மாற்றத்தை, அறநிலையத் துறை சட்டப்படியே மேற்கொள்ள முடியும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (48+ 17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202211:48:38 IST Report Abuse
அப்புசாமி கோவில் சொத்துக்களை யார் கிட்டே குடுத்தாலும் சுரண்டத்தான் செய்வாங்க. சிதம்பரம் கோபுரங்களை பாருங்கள் என்னிக்கும் இடிஞ்சு விழலாம். சிவகாமேஸ்வரி சந்நிதிக்கு போகவே பயமா இருக்கு. அத்தனை எண்ணெய் வடிசல். இருட்டு. வசூலாகுற காசெல்லாம் எங்கே போகுதோ? கோசாலைன்னு வெச்சுக்கிட்டு ஒரே சாணி, கோமிய நாற்றம். சரி, அறநிலையத்துறை எடுத்து நடத்தலேன்னு பாத்தா, அவிங்க இன்னும் அதிகமா சுரண்ட ஆரம்பிச்சுருவாங்க. நடராசரையே வித்துருவாங்க.
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
14-ஆக-202218:25:41 IST Report Abuse
Palanisamy T தமிழக நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு இந்திய மக்களுக்கே பொருந்தக் கூடிய நல்ல தீர்ப்பு. தமிழக மக்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கின்றார்களென்பது தெளிவா கின்றது. இனிமேல் இந்திய நாட்டில் எவனும் கோவில் சொத்துக்களை தங்கள் விருப்பம் போல் சுயநலத்திற்க்காகவும் பயன்படுத்தமுடியாது. எல்லா கோவில் அறங்காவலர்களுக்கும் கிடைத்த நல்ல தீர்ப்பு.
Rate this:
Cancel
14-ஆக-202216:26:42 IST Report Abuse
ஆரூர் ரங் ஹிந்து அரசர்கள் கட்டிய கோவிலில் மதசார்பற்ற அரசு நுழைந்து நாட்டாமை செய்வது நியாயம் என்றால்🤔 ஹிந்துக்களின் மீது ஜஸியா வரி போட்டு அதில் முகலாயர்கள் கட்டிய மசூதி நிர்வாகத்தில் அரசும் ஹிந்துக்களும் தலையிட விடுவார்களா? இந்தியாவை சுரண்டிய நிதியில் வெள்ளையர்களால்🤯 கட்டப்பட்ட சர்ச்களின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்குமா?
Rate this:
கஜகரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா
14-ஆக-202219:01:55 IST Report Abuse
கஜகரன் . தமிழர்கள் கட்டிய கோயில் என்று சொல்லு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X