தேசியக்கொடி தயாரிப்பு, விற்பனையில் முறைகேடு?

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கரூர் : தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் விற்பனையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முறைகேடில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், மகளிர் சுய உதவிகுழுவினரால் தரமான தேசியக்கொடி தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.பொதுமக்களுக்கு தேசியக்கொடி வினியோகிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. கரூர்
தேசியக்கொடி தயாரிப்பு, விற்பனையில் முறைகேடு?


கரூர் : தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் விற்பனையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முறைகேடில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், மகளிர் சுய உதவிகுழுவினரால் தரமான தேசியக்கொடி தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.பொதுமக்களுக்கு தேசியக்கொடி வினியோகிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

கரூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடில், சுய உதவி குழுக்களால், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரூர் மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, 3 லட்சம் தேசியக்கொடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், மகளிர் சுய உதவி குழுக்கள், 1.50 லட்சம் கொடிகள் விற்றுள்ளன.இங்கிருந்து அரசு பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு, அரசு அலுவலர்கள் ஆகியோரிடம் விற்பனை செய்யப்பட்டன.

இதில், அரசு அலுவலக பணியாளர்கள், பள்ளி ஆசியர்கள் உட்பட பல அரசு அலுவலர்களிடம், 50 ரூபாய்க்கு ஒரு தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 20 முதல், 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரே கொடி, மூன்று விதமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி தயாரிக்காமல், நீளம், 1.5 அடி, உயரம், 1 அடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தையல் பணி சரியாக மேற்கொள்ளாமல், நுால்கள் பிரிந்து சேதமடைந்து காணப்படுகின்றன. சேதமடைந்துள்ள தேசியக்கொடியை ஏற்றக்கூடாது என்ற விதி உள்ளதால், இந்த கொடியை எப்படி ஏற்றுவது என, தெரியவில்லை.தபால் நிலையத்தில், 25 ரூபாய்க்கு, அரசு விதிமுறைப்படி, நீளம், 3 அடி, உயரம், 2 அடியில் தரமான தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.

தேசியக்கொடியின் விலை கூட கூடுதல், குறைவு பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. தயாரிப்பில் கூட நேர்மையாக செயல்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாவட்ட அதிகாரிகள் சிலர், தேசியக்கொடி தயாரிப்பு, விற்பனையில் கூட நேர்மையாக செயல்படாமல் முறைகேட்டில் ஈடுபட்டனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

கரூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இணை இயக்குனர் வாணி ஈஸ்வரியிடம் கேட்டபோது, ''அந்தந்த துறை சார்பில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக, விலை நிர்ணயத்தில் வேறுபாடுகள் உள்ளன. ''மேலும், 1.50 லட்சம் கொடி மட்டுமே எங்களால் தயாரிக்க முடிந்ததால், மற்ற அரசு அலுவலகங்களில் வெளியில் வாங்கி கொண்டனர். கொடி விற்பனை செய்த தொகை, அந்தந்த மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறிவிட்டோம். நாங்கள் எந்தவிதமான பண பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T R Raja Raja - chennai,இந்தியா
14-ஆக-202216:17:02 IST Report Abuse
T R Raja Raja மனசாட்சி இல்லாமக்கள்
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
14-ஆக-202211:52:57 IST Report Abuse
V GOPALAN Dravida Model Govt is running Shame to Tamilnadu
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
14-ஆக-202209:26:31 IST Report Abuse
Vijay திமுக என்றாலே தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X