பி.எஸ்.என்.எல்., கட்டடத்திற்கு சொத்துவரி இல்லை: உயர்நீதிமன்றம்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மதுரை : பி.எஸ்.என்.எல்., நிறுவன சொத்துக்கள் மத்திய அரசு வசம் உள்ளதால் அதற்கு சொத்து வரியை உள்ளாட்சி அமைப்பு வசூலிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிவகாசி அருகே குமிழங்குளம் ஊராட்சி பகுதியில் பி.எஸ்.என்.எல்., கட்டடம் உள்ளது. இதற்கு சொத்து வரி செலுத்தக்கோரி குமிழங்குளம் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல்., விருதுநகர்
பி.எஸ்.என்.எல்., கட்டடம்,  சொத்துவரி, உயர்நீதிமன்றம்,


மதுரை : பி.எஸ்.என்.எல்., நிறுவன சொத்துக்கள் மத்திய அரசு வசம் உள்ளதால் அதற்கு சொத்து வரியை உள்ளாட்சி அமைப்பு வசூலிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சிவகாசி அருகே குமிழங்குளம் ஊராட்சி பகுதியில் பி.எஸ்.என்.எல்., கட்டடம் உள்ளது. இதற்கு சொத்து வரி செலுத்தக்கோரி குமிழங்குளம் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல்., விருதுநகர் பொதுமேலாளர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி ஆர்.விஜய குமார் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: பி.எஸ்.என்.எல்., தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டாலும், மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சொத்துக்கள், கட்டடங்கள் இன்றும் மத்திய அரசின் பெயரில் உள்ளன. இப்படி இருக்கும்போது வரி விதிக்க​மாநில அரசு அல்லது வேறு எந்த உள்ளாட்சி அமைப்பிற்கும் உரிமை இல்லை.


latest tamil news



வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது. நீதிபதி: பி.எஸ்.என்.எல்., தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது என்றாலும் கட்டடம், நிலம் இன்னும் மத்திய அரசின் பெயரில் உள்ளது ஆவணங்களின்படி உறுதியாகிறது. சொத்துக்களை மனுதாரரின் பெயருக்கு மாற்ற மனுதாரர் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

மனுதாரர் அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் மீது, ஊராட்சி நிர்வாகம் எந்த சொத்து வரியும் விதிக்க முடியாது. மத்திய அரசு வசம் உள்ள இச்சொத்துக்கள் எதிர்காலத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு மாற்றப்பட்டால் அப்போது வரி விதிப்பதற்கான உரிமையை உள்ளாட்சி அமைப்பு பெறும். மனு அனுமதிக்கப்படுகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202212:00:40 IST Report Abuse
அப்புசாமி ஜி.எஸ்.டி ந்னுட்டு லட்சம் கோடிக்கணக்கில் வசூலிக்கிறாங்க. பி.எஸ்.என்.எல் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வசூலிக்காமல் சேவை தரச்சொல்லுங்களேன்? இவிங்க உருவறதில் ஒண்ணும் குறைச்சல் இருக்காது. ஆனா வரி கட்டுன்னா கோர்ட்டோட வருவாங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202211:34:04 IST Report Abuse
duruvasar பஞ்சமி நிலத்திலுள்ள முரசொலி அலுவலக கட்டிடத்திற்கு இந்த மாதிரியான விலக்கு உண்டா ?
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
14-ஆக-202209:43:33 IST Report Abuse
GMM Bsnl மத்திய அரசு நிறுவனம். வரி செலுத்த மாறன் நிறுவனம் அல்ல. Bsnl வரும்போது, மாநில அரசு, பிற அரசு துறைகள், ஊராட்சி ஒன்றிய அனைத்து அலுவலகமும் வரி விதிப்பு எல்லையில் வரும். உண்மையான வரி வசூல் போதும். ஊழல் ஊராட்சி, நகராட்சிகள் வரிப்பணத்தை குடிநீர், சுகாதார வசதிக்கு முறையாக செலவிட வேண்டும். என்ன அதிகாரம் கொடுக்க பட்டது என்று பார்த்து பணிபுரிய தெரிய வேண்டும். தனியார் சொத்துக்கள் தான் வரி விதிப்பில் வரும்.? சிலவருக்கு விலக்கு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X