ரேஷன் அரிசி கடத்தல்; சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை| Dinamalar

ரேஷன் அரிசி கடத்தல்; சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை

Added : ஆக 14, 2022 | |
பாகூர் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, புதுச்சேரி தெற்கு மாவட்ட காங்., சார்பில், பாத யாத்திரை நேற்று நடைபெற்றது.பாத யாத்திரையை, அரியாங்குப்பத்தில் காங்., தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் துவக்கி வைத்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர்கள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், விஜயவேணி, நீலகங்காதரன் மற்றும் நிர்வாகிகள் பலர்
ரேஷன் அரிசி கடத்தல்;  சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை


பாகூர் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, புதுச்சேரி தெற்கு மாவட்ட காங்., சார்பில், பாத யாத்திரை நேற்று நடைபெற்றது.பாத யாத்திரையை, அரியாங்குப்பத்தில் காங்., தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் துவக்கி வைத்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர்கள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், விஜயவேணி, நீலகங்காதரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் வழியாக சென்ற பாதயாத்திரை கன்னியக்கோவிலில், இரவு 9.00 மணியளவில் முடிவடைந்தது.முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் என்.ஆர்.காங்., -பா.ஜ.,. கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதியாக பஞ்சாலைகளை திறந்து 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவோம், மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம்,



புதுச்சேரி அரசின் கடனை ஒரே வருடத்தில் தள்ளுபடி செய்வோம், பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம் என கூறினர். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.முழு பட்ஜெட்டை கூட போட முடியாத அரசு தான் நடக்கிறது. புதுச்சேரி முழுவதும் ரத்த ஆறு தான் ஓடுகிறது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, கஞ்சா அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.மக்களுக்கான இலவச அரிசியை, ஒரு அமைச்சரே கடத்தக் கூடிய நிலை உள்ளது. இதன் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பாதயாத்திரையில் பங்கேற்ற காங்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஏற்றிச் சென்ற, தனியார் பஸ்சை அனந்தராமன் ஓட்டிச் சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X