அரியாங்குப்பம் : நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது.அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்திகுறிப்பு :நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குபட்ட பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் நாளை காலை 10:௦௦ மணியளவில் நடக்கிறது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், ஆர்.கே. நகர், வீராம்பட்டினம், மணவெளி, தவளக்குப்பம், நோணாங்குப்பம், பூரணாங்குப்பம், நல்லவாடு, அபிஷேகப் பாக்கம், டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் பொது மக்கள் பங்கேற்று, கிராம வளர்ச்சிக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.