திருக்கனுார் : திருக்கனுார் பஜார் வீதியில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்றி வைத்தார்.நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்கனுார் பஜார் வீதியில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., நிர்வாகிகள் தமிழ்மணி, வீரராகவன், கண்ணன், செல்வகுமார், கலியபெருமாள், ராஜா, சையது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மணவெளி அங்கன்வாடியில் அமைச்சர் நமச்சிவாயம் தேசியக் கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் தேசியக்கொடி வழங்கி, வீடுகளில் ஏற்றும்படி அமைச்சர் நமச்சிவாயம் கேட்டுக் கொண்டார்.