கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட்டுக்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியுமா? புது கட்டுப்பாடுகள் அமல்

Added : செப் 08, 2011 | கருத்துகள் (8)
Advertisement
Chennai high court, beefs up security, சென்னை ஐகோர்ட்டு, புது கட்டுப்பாடுகள் அமல்,

சென்னை: சென்னை ஐகோர்ட்டில், முன்பு இருந்த பாதுகாப்பு முறையைப் பின்பற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. வெளி நபர்கள், அவர்களின் வாகனங்கள் ஐகோர்ட்டுக்குள் வருவது ஒழுங்குபடுத்தப்படுகிறது. கோர்ட் ஹாலுக்குள் வழக்கறிஞர்கள், வழக்குக்கு ஆஜராகும் தனி நபர்களைத் தவிர, வேறு யாருக்கும் அனுமதியில்லை.


டில்லி ஐகோர்ட் நுழைவாயில் அருகே நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டும் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. ஐகோர்ட் நுழைவாயில்கள் அனைத்திலும், வழக்கத்தை விட கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். கோர்ட்டுக்குள் வரும் வாகனங்களை அவர்கள் சோதனையிட்டனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் தலைமையில், நீதிபதிகள் தர்மாராவ், டி.முருகேசன், நாகப்பன், பானுமதி, மோகன்ராம் ஆகியோர் அடங்கிய குழு, வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் நேற்று, ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தியது. பார் கவுன்சில் தலைவர் செல்வம், ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் முரளி, செயலர் அறிவழகன், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் அழகிரிசாமி, செயலர் லோகநாதன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி பிரசன்னா, துணைத் தலைவர் நளினி, செயலர் மஞ்சுளாதேவி, பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.சாந்தகுமாரி, லா அசோசியேஷன் தலைவர் விஜயராகவன், இணைச் செயலர் என்.காமராஜ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

* ஐகோர்ட் வளாகத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. ஏற்கனவே வகுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

* ஐகோர்ட் வளாகத்தில் வெளி நபர்கள், அவர்களின் வாகனங்கள் வருவது ஒழுங்குபடுத்தப்படும். வழக்கறிஞர்களின் அனுமதிக் கடிதம் இருந்தால் தான் அவர்கள் வாகனங்கள், கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படும்.


* கோர்ட் ஹாலுக்குள் வழக்கறிஞர்கள், வழக்குக்காக ஆஜராகும் தனி நபர்களைத் தவிர (பார்ட்டி இன் பெர்சன்), வேறு யாருக்கும் அனுமதியில்லை.


* தமிழக போலீசாரே, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்வர். அவர்களின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும்.


* மேற்கூறிய தீர்மானங்கள், உடனடியாக அமலுக்கு வரும்.


451 போலீசார்: இந்தியாவில் உள்ள மூன்று சார்ட்டர்டு ஐகோர்ட்டுகளில், சென்னை ஐகோர்ட்டும் ஒன்று. ஐகோர்ட் கட்டடம் புராதனமானது; கோர்ட் ஹால்கள், நீதிபதிகளின் அறைகள், வழக்கறிஞர்களின் அறைகள், மியூசியம், சட்டப் பணிகள் ஆணையம், போலீஸ் நிலையம் (தற்போது இல்லை), செஷன்ஸ் கோர்ட், சிவில் கோர்ட், தீர்ப்பாயங்கள், சட்டக் கல்லூரி, தீயணைப்பு நிலையம், பி.எஸ். என்.எல்., அலுவலகம், ரயில்வே புக்கிங் அலுவலகம், தபால் அலுவலகம் இங்கு அமைந்துள்ளன. தினசரி ஐகோர்ட்டுக்குள் ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். ஐகோர்ட்டுக்குள் வர எஸ்பிளனேடு கேட், ஆவின் கேட், பார் அசோசியேஷன் கேட், நீதிபதிகளுக்கான கேட், சட்டப் பணிகள் ஆணையம் அருகில் உள்ள கேட் என, மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன. மத்திய உள்துறை, 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஐகோர்ட், கீழ் கோர்ட்டுகள், நீதிபதிகளுக்கு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டுமென, அந்த உத்தரவில் கூறப்பட்டது. அதன்படி, ஐகோர்டில் உள்ள பாதுகாப்புக் குழு, ஆய்வுகளை மேற்கொண்டது. ஐகோர்ட் பாதுகாப்பிற்காக, 451 போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என, நீதிபதிகள் குழுவும் பரிந்துரைத்தது.


நுழைவாயில்களில் கேமரா: தினசரி ஆயிரக்கணக்கான பேர் வருவதாலும், புராதன கட்டடத்தைப் பாதுகாக்கவும், ஐகோர்ட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு உத்தரவை ஐகோர்ட் பிறப்பித்தது. ஐகோர்ட்டில், 252 போலீசாரை பாதுகாப்பிற்கு நிறுத்த வேண்டும் என்றும், கோர்ட் வளாகத்தில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி, 252 போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். வழக்கறிஞர்கள், ஊழியர்கள், நிருபர்களுக்கென தனித் தனியே அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஐகோர்ட் நுழைவு வாயில்கள் அனைத்திலும் போதிய போலீசார் நிறுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களில் தான், ஐகோர்ட்டில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐகோர்ட்டில் போலீஸ் பாதுகாப்பு கேள்விக்குறியானது. ஏற்கனவே வகுக்கப்பட்ட பாதுகாப்பு முறைப்படி, உதவி கமிஷனர் தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள், 10 சப் - இன்ஸ்பெக்டர்கள், 237 போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு வாயிலிலும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்படும். படிப்படியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். கீழ் கோர்ட்டுகளிலும் இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. நுழைவாயில்களில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டியதும் அவசியமாகிறது.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Bangalore,இந்தியா
09-செப்-201113:06:37 IST Report Abuse
Sundar அனைத்து பொது இடங்கள், மருத்துவ மனைகள், ஷாப்பிங் மால்கள் , கோவில்கள்,பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
VISWANTHAN KARTHIKEYAN - muscat,ஓமன்
09-செப்-201111:25:13 IST Report Abuse
VISWANTHAN KARTHIKEYAN இதை முன்பாக செய்யலாமா? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் கதை போல் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Jubail,சவுதி அரேபியா
09-செப்-201111:03:00 IST Report Abuse
Nallavan Nallavan ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலன்றி, நாம் விழித்துக் கொள்வதில்லை! ஒரு உயர்நீதிமன்றம் குண்டு வெடிப்புக்கு உள்ளானால் நாம் குறிப்பாக மற்ற உயர் நீதி மன்றங்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்று கருதுகிறோம்!!!! மற்ற இடங்களில் குண்டு வைக்க மாட்டோம் என்று சத்தியமா செய்து கொடுத்துவிட்டார்கள் இந்தத் தீவிரவாதிகள்???? நல்ல காமெடி சார்!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X