மதுக் கடைகளை மூடினால் ஆளுங்கட்சியினரும், 'டாஸ்மாக்' அதிகாரிகளும் தான் பாதிக்கப்படுவாங்க...

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: மதுக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை. திடீரென மூடினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் அருகே மதுக்கடைகள் இருந்தால், அவற்றை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மதுக் கடைகளை திடீர்னு மூடினால், அதை வைத்து சம்பாதிக்கும் ஆளுங்கட்சியினரும், 'டாஸ்மாக்'
முத்துசாமி, ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.வாசன்

வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: மதுக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை. திடீரென மூடினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் அருகே மதுக்கடைகள் இருந்தால், அவற்றை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மதுக் கடைகளை திடீர்னு மூடினால், அதை வைத்து சம்பாதிக்கும் ஆளுங்கட்சியினரும், 'டாஸ்மாக்' அதிகாரிகளும் தான் பாதிக்கப்படுவாங்க... மற்ற யாருக்கும், எந்தப் பாதிப்பும் இருக்காது!


பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி: அந்தமான் பள்ளிகளில் ஹிந்தி படிப்பதால், அங்குள்ள தமிழர்கள் உயர்கல்விக்கு பெங்களூரு செல்கின்றனர். அந்தமானிலேயே உயர்கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, அந்தமான் தமிழர்கள் என்னிடம் முன்வைத்தனர். இவற்றை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறேன்.

தங்கள் கட்சியின் ஆட்சி மத்தியில் நடக்கும் போது, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதில், எந்த தயக்கமும் இருக்காது என நம்பலாம்!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சமூக நீதியில், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. அது, குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பிலும் எதிரொலிக்க வேண்டும். எனவே, குரூப் - 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு, 40 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 45 ஆகவும், தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

இந்த வயது வரம்பு உயர்வால், நிறைய இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாதா?


மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் பேச்சு: பாரதியாரின் திறமைகளை, அவர் காலத்தில் யாரும் கொண்டாடவில்லை; அவர் புறக்கணிக்கப்பட்டார். அதுபோல, தற்போதைய திறமையாளர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது.

பாரதியாரை, அவர் வாழ்ந்த காலத்தில் கொண்டாடாமல் போனது தான், நாம் செய்த மாபெரும் தவறு!


ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி: தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவில் ஆபரணங்களை உருக்கி அழிக்க வேண்டாம். கோவில் தங்கத்தை உருக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கோவில்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, கோர்ட் வரையறுத்த பின்னரும், அறங்காவலர்களை நியமிக்கவில்லை. கோவில் நிலங்கள் எவ்வளவு என, கணக்கிடவில்லை. நிலத்துக்கான வாடகை, குத்தகை நிலுவையை வசூலிக்கவில்லை.

அறங்காவலர்களாக, ஆளுங்கட்சி பிரமுகர்களில் யாரை தேர்வு செய்வது என்பதில், காலம் கடத்துறாங்களோ என்னவோ?


பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலை, லிட்டருக்கு, 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது, கடந்த ஆறு மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வாகும். பால் சந்தையில், ஆவினின் பங்கை, 50 சதவீதமாக உயர்த்துவது, பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றால் மட்டுமே, பால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களை காக்க வேண்டும்.


latest tamil newsதனியாருக்கு நிகராக ஆவின் பால் விலையை உயர்த்தாமல் இருந்தாலே, புண்ணியமாக போகும்!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை
: சுதந்திர போராட்ட தியாகிகளில் பெரும்பாலானோர் வயது முதிர்வு காரணமாக காலமாகி விட்டனர். அவர்களின் நேரடி வாரிசுகளான மனைவிக்கு, அவரது ஓய்வூதி யத்தில் பாதி குடும்ப ஓய்வூதி யமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்களிலும், தற்போது பலர் காலமாகி விட்டனர். எனவே, தியாகிகளின் மனைவிக்கு பின் அவர்களின் அடுத்த சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

நியாயமான கோரிக்கை தான்... 75வது சுதந்திர தின பரிசாக, முதல்வர் இதை அறிவித்தால் நன்றாக இருக்கும்!


தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: பா.ஜ.,வின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக, ஏழை, எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப் பட்டு வருகின்றனர். நாட்டின் ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கி வருகிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அழிவு பாதையில் இருந்து இந்தியாவை மீட்க, 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவில், அனைத்து மக்களும் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட வேண்டும்.

உங்க கட்சியின் எதிர்காலத்தை, ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலத்தோடு ஒப்பிடுவது சரியா?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் மோசடி நிறுவனங்கள் காளான்களை போல உருவெடுத்து மக்களை ஏமாற்றுவதற்கு, மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும், காவல் துறையின் அலட்சி யமுமே காரணம். அதிக வட்டி, பரிசு ஆசை காட்டி வரும் விளம்பரங்கள், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.

உழைக்காம வரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் கட்டிய மக்கள் தான், இதில் முதல் குற்றவாளிகள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும், குமரி மாவட்டத்தில் உள்ள இரையுமன் துறைமுகத்தை சீரமைக்கவும், தொடர் விபத்துகளை தடுக்கவும்,எந்த செயல் திட்டத்தையும் முன்னெடுக்காது, மக்கள் உயிரை காக்க தவறிய தி.மு.க., அரசு, இனியாவது தன் அலட்சிய போக்கை கைவிட வேண்டும்.

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரான மனோ தங்கராஜ், இது குறித்து வாயே திறப்பது இல்லையே!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
14-ஆக-202217:34:56 IST Report Abuse
sankaseshan Democracy is in safe hands of Modiji. Mr.அழகிரி Don't worry. People remember emergency days
Rate this:
Cancel
14-ஆக-202214:05:16 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் மதுக் கடைகளை மூடனும் மாற்று கருத்தில்லை அனால் GUJARATHIL இருந்து வரும் கஞ்சா ரொம்ப மோசமானது அதை என் தடுக்க வில்லை
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
14-ஆக-202216:24:00 IST Report Abuse
suresh kumarதமிழ்நாட்டு எல்லையை காவல் காப்பது யார்? அந்த காவலைத் தாண்டி எப்படி உள்ளே வருகிறது?...
Rate this:
Cancel
14-ஆக-202214:02:06 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் பிரதமரின் பேச்சு அரசியலும் அல்ல அறமும் அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X