கரூரில் புத்தக திருவிழா: அடையாள சின்னம் வெளியீடு

Added : ஆக 14, 2022 | |
Advertisement
கரூரில் புத்தக திருவிழாவையொட்டி, 'தேவாங்கு' விலங்கை மையப்படுத்தி, 'நுாலன் மற்றும் நுாலி' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட அடையாள சின்னத்தை, கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:கரூர் புத்தக திருவிழாவையொட்டி, கடவூர் காடுகளில் அதிகம் வசிக்கும், 'தேவாங்கு' விலங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வினத்தை பாதுகாக்க, 'கடவூரில் தேவாங்கு


கரூரில் புத்தக திருவிழாவையொட்டி, 'தேவாங்கு' விலங்கை மையப்படுத்தி, 'நுாலன் மற்றும் நுாலி' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட அடையாள சின்னத்தை, கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கரூர் புத்தக திருவிழாவையொட்டி, கடவூர் காடுகளில் அதிகம் வசிக்கும், 'தேவாங்கு' விலங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வினத்தை பாதுகாக்க, 'கடவூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளின் சம உரிமைகளை அடையாளப்படுத்தும் வகையிலும் நுாலனும், நுாலியும் என்ற அடையாள சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக திருவிழா, வரும், 19 முதல் கரூர் திருமாநிலையூரில் தொடங்குகிறது. தினந்தோறும், மாலை, 4:00 முதல் 6:00 மணி வரை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், 20ல், சாலமன் பாப்பையா பட்டிமன்றம்; 21ல் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின், 'மண் மனம் - மக்களிசை' என்ற கலை நிகழ்ச்சி; 22ல் டாக்டர் சிவராமன், 'நலம்- இனி நம் முதல் தேடல்' என்ற தலைப்பில் சிறப்புரை; 23ல் மோகனசுந்தரம் 'தனமும், இன்பமும் வேண்டும்' என்ற தலைப்பில் சிறப்புரை; கோபிநாத், 'எது புரிந்தால் வாழ்க்கை புரியும்' என்ற தலைப்பில் சிறப்புரை; 24ல் பாரதி கிருஷ்ணகுமார், 'அறம் செய்ய விரும்பு' என்ற தலைப்பில் பேச்சு; 25ல் சுந்தர ஆவுடையப்பனின், 'தண்டோரா' என்ற தலைப்பில் சிறப்புரை மற்றும் கவிஞர் கவிதாசனின், 'வெல்வதற்கே வாழ்க்கை' என்ற தலைப்பில் சிறப்புரை; 26ல் பாரதிபாஸ்கர், 'கதை கேளு; கதை கேளு' என்ற தலைப்பில் சிறப்புரை; 27ல் கலைமாமணி திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம்; 28ல், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், 'நல்ல காகிதம் செய்வோம்' என்ற தலைப்பில் சிறப்புரை; சுகிசிவம், 'எங்கோ பெய்த மழை' என்ற தலைப்பில் சிறப்புரை; 29ல் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் மற்றும் குழுவினரின், 'சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்' என்ற நிகழ்ச்சியும் நடக்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X