மதுரை சரவணன் பா.ஜ.,விலிருந்து நீக்கம் : அண்ணாமலை

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (58) | |
Advertisement
சென்னை: மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நேற்று (ஆக.,14) மதுரையில் நடந்த ராணுவ வீரர் இறுதி அஞ்சலியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.,வினர் செருப்பை வீசினர். இந்த சம்பவத்தை அடுத்து டாக்டர் சரவணன் அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இது பா.ஜ.,வில் சலசலப்பை
மதுரை சரவணன் பா.ஜ.,விலிருந்து நீக்கம் : அண்ணாமலை

சென்னை: மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நேற்று (ஆக.,14) மதுரையில் நடந்த ராணுவ வீரர் இறுதி அஞ்சலியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.,வினர் செருப்பை வீசினர். இந்த சம்பவத்தை அடுத்து டாக்டர் சரவணன் அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இது பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரவணன் பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-ஆக-202202:04:25 IST Report Abuse
BASKAR TETCHANA என் உடம்பில் திராவிட ரத்தம் தான் ஓடுகிறது என்று சொல்லும் நீ அங்கு பதவி இல்லை என்றதும் ...... இங்கு வந்தாய். இப்போது மட்டும் அங்கு போனால் என்ன மரியாதை கிடைக்கும் சொல். பி.தி.ஆர்.க்கு செருப்பு துக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-ஆக-202218:09:53 IST Report Abuse
வெகுளி கட்சி முக்கியமா உசுரு முக்கியமான்னு டாக்டர் யோசிச்சருப்பாரு....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஆக-202220:31:46 IST Report Abuse
Visu Iyerஅந்த பக்கம் கார் வருதா.. அல்லது லாரி வருதா...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-ஆக-202215:51:10 IST Report Abuse
Barakat Ali தீமுக மரண பயத்தை காட்டி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X