இந்திய பங்குச்சந்தை பிதாமகன் ராகேஷ் ஜூன்சுன்வாலா காலமானார் : ரூ.44 ஆயிரம் கோடிக்கு அதிபதி ..!

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
இந்தியாவின் வாரன் பப்பெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்சுன்வாலா (62) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உட்பல பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முன்னோடியாக திகழ்ந்தவர் ராகேஷ் ஜூன்சுன்வாலா. இன்று (ஆக.14) காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, மும்பையில் உள்ள
India, இந்தியா, Rakesh Jhunjhunwala,BIG BULL OF DALAL STREET,
ராகேஷ் ஜூன்சூன்வாலா, பங்குச்சந்தை, வாரன் பப்பெட்


இந்தியாவின் வாரன் பப்பெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்சுன்வாலா (62) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உட்பல பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முன்னோடியாக
திகழ்ந்தவர் ராகேஷ் ஜூன்சுன்வாலா. இன்று (ஆக.14) காலை அவருக்கு திடீரென
உடல்நலக்குறைவு ஏற்படவே, மும்பையில் உள்ள கேண்டி பீரிச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலை 6.45மணியளவில் சிகிச்சை பலனின்றி, அவரது உயிர் பிரிந்தது. சிறுநீரக கோளாறு உட்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சில வாரங்களுக்கு முன்பு தான் டிஸ்சார்ஜ்

செய்யப்பட்டிருந்தார்.


யார் இந்த ராகேஷ் ஜூன்சுன்வாலா ?1960ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூன்ஜூன்வாலா பிறந்தார். இவரது தந்தை வருமான வரித்துறை கமிஷனராக மும்பையில் பணியாற்றி வந்ததால், மும்பையில் வளர்ந்த அவர், அங்குள்ள கல்லூரியில் சி.ஏ., படித்துள்ளார். அவரது தந்தை பங்குச்சந்தை குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை கேட்டு, அதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அவரது தந்தை பணம் தர மறுத்துள்ளார். கல்லூரி படித்து கொண்டிருந்த போதே தனது சேமிப்பில் இருந்தும், நண்பர்களுடன் இணைந்து 1985ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவங்கினார். 1986ல் முதல் பெரிய லாப தொகையாக ரூ. 5 லட்சம் எடுத்தார். 1986-89 வரை 20 முதல் 25 லட்சம் லாபமாக எடுத்தார்.


latest tamil news


ரேர் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில், பங்குச்சந்தை ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்தார். இன்று அவரது முதலீடு 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வளர்ந்துள்ளது.

ஆடிட்டர், பங்குச்சந்தையில் முதலீடு தவிர பல்வேறு நிறுவனங்களில் இயக்குநர் குழுவின்
தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்துள்ளார். பங்குச்சந்தையில் இவரை 'இந்தியாவின் பெரிய காளை', 'காளை சந்தையின் அரசன்' என்று குறிப்பிடுகின்றனர்.


latest tamil news


சமீபத்தில் தான், ஜெட் ஏர்வேஸ்முன்னாள் சி.இ.ஓ வினய் துபே உடன் இணைந்து 'ஆகாசா ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் இந்தியாவின் மலிவு விலை விமானபோக்குவரத்தை துவங்கினார். ஆகாசா ஏர்லைன்ஸ் சார்பில் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 70 விமானங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 36வது இடம்பிடித்திருந்த ராகேஷ் ஜூன்சுன்வாலா கடைசியாக ஆகாசா ஏர் விமானச்சேவை துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202210:51:32 IST Report Abuse
ஆரூர் ரங் முக்கிய தகவல். இத்தனை சொத்து🤔 இருந்தும் எளிய நடுத்தர வகுப்பு வாழ்க்கைதான் வாழ்ந்தார்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
14-ஆக-202219:12:35 IST Report Abuse
DVRR ரூ 44,000 கோடி சொத்து 2022ல் 1985 ல் ரூ 5,000 முதலீடு செய்ததிலிருந்து. அவருடைய மனைவியும் அல்மோஸ்ட் அதே அளவில் தான் சொத்து சேர்ப்பு. இதனால் உனக்கு நீ செய்து கொண்ட நன்மை என்ன குழந்தைகளுக்கு செய்த நன்மை என்ன இந்த சமூகத்திற்கு நீ செய்த நன்மை என்ன???ஏதாவது உண்டா???அப்போ இந்த ரூ 44,000 கோடியால் உனக்கும் நன்மை இல்லை யாருக்கும் நன்மை இல்லையா???ஐயோ பாவம் உன் வாழ்க்கை வரலாறு???
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
15-ஆக-202203:15:12 IST Report Abuse
Venkateshஎன்னுடைய மற்றும் உன்னுடைய வாழ்க்கையும் இப்படித்தான் முடியும், நாம் என்ன செய்கிறோம் , என்ன செய்ய போகிறோம் என்று முதலில் யோசி....
Rate this:
15-ஆக-202210:50:05 IST Report Abuse
ஆரூர் ரங்தொழில் முதலீடுகள் மூலம் பல கோடி குடும்பங்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள அனைவருமே தேசப் பற்றுள்ளவர்கள்தான். பங்குச்சந்தை இல்லாவிடில் தொழில் வளர்ச்சி🤔 சாத்தியமாகியிருக்காது....
Rate this:
jagan - Chennai,இலங்கை
17-ஆக-202201:46:17 IST Report Abuse
jagan- நீ என்ன செய்தாய்??...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஆக-202217:44:47 IST Report Abuse
Natarajan Ramanathan இவரும் ஒரு பார்சி என்று நினைக்கிறேன். அவர்கள் தொட்டது எல்லாம் துலங்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X