போரினால் பயனடைந்த ரஷ்யா: ஏற்றுமதி மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாக உயர்வு

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ரஷ்யாவின் மத்திய வங்கி வெளியிட்ட தகவல் படி ஏற்றுமதி - இறக்குமதி மதிப்பினை குறிக்கும் அந்நாட்டின் நடப்பு கணக்கானது கடந்த ஆண்டை காட்டிலும் 2022ல் 7 மாதங்களிலேயே மூன்று மடங்கிற்கு மேல் வளர்ந்து உபரி நிலையை எட்டியுள்ளது. மலிவு விலை எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியினால் இது சாத்தியமாகியுள்ளது.ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து நேட்டோ
Putin, Russia, Ukraine, Current_Account, புடின், ரஷ்யா

ரஷ்யாவின் மத்திய வங்கி வெளியிட்ட தகவல் படி ஏற்றுமதி - இறக்குமதி மதிப்பினை குறிக்கும் அந்நாட்டின் நடப்பு கணக்கானது கடந்த ஆண்டை காட்டிலும் 2022ல் 7 மாதங்களிலேயே மூன்று மடங்கிற்கு மேல் வளர்ந்து உபரி நிலையை எட்டியுள்ளது. மலிவு விலை எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியினால் இது சாத்தியமாகியுள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து நேட்டோ படையில் இணையப் போவதாக கூறி வந்தது. இதனால் தங்களின் இறையான்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நினைத்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்தது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்கள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ரஷ்யா பெரும்பாலும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயை நம்பியுள்ளது. பொருளாதார தடைகளை சமாளிக்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு மிகவும் மலிவு விலையில் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.


latest tamil news


இந்நிலையில் ஜனவரி முதல் ஜூலை வரை நடப்பு கணக்கு உபரி, அதாவது ஏற்றுமதி மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஏற்றுமதி மதிப்பு வெறும் 3.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ரஷ்யாவின் வருவாய் மற்றும் உலகளவில் பரிவர்த்தனை நடத்தும் திறனை முடக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தடைகள் இருந்த போதிலும் ரஷ்யா சாதனை உபரி அளவை எட்டியுள்ளது. ஏற்றுமதியால் மட்டுமே நடப்பு கணக்கு உபரி ஏற்பட்டுவிடவில்லை. பொருளாதாரத் தடைகளால் இறக்குமதி பாதித்ததாலும் இந்த உபரி ஏற்பட்டுள்ளது.


latest tamil news


ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடான சீனா, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு சாதகமாக நிற்கிறது. சீனாவிடமிருந்து தேவையான பொருட்களை ரஷ்யா இறக்குமதி செய்கிறது. ஜூலை மாதத்தில் சீனாவிடமிருந்து இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி ஆகும். சீன பணமான யுவான் மற்றும் ரஷ்யாவின் ரூபிளுக்கு இடையேயான வர்த்தக அளவிலும் சாதனை உச்சத்தை எட்டியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
15-ஆக-202201:14:20 IST Report Abuse
Sankar Ramu அருமை👏👏👏
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-ஆக-202215:52:29 IST Report Abuse
Barakat Ali இந்தியா போன்ற நாடுகளின் பணம் ....
Rate this:
jagan - Chennai,இலங்கை
14-ஆக-202216:41:34 IST Report Abuse
jaganமத்திய கிழக்கு தீவிரவாதிகளுக்கு அதிக பணம் குடுப்பதிற்கு பதில் மலிவு விலை ரஷ்ய பெட்டெர். சீன பணமும் உண்டு....
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-ஆக-202215:52:05 IST Report Abuse
Barakat Ali அம்புட்டும் இந்தியாவின் பணம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X