பா.ஜ., அமைதியை விரும்பும் கட்சி: அண்ணாமலை

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (59) | |
Advertisement
ராமேஸ்வரம்: அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத ஒன்று எனவும், பாஜ., அமைதியை விரும்பும் கட்சி என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கச்சத்தீவு இலங்கையிடம் இருப்பதால் அந்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை அதனை நாம் திரும்ப பெற வேண்டும். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.,வின் கோரிக்கை
பாஜ, அண்ணாமலை, bjp, annamalai,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமேஸ்வரம்: அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத ஒன்று எனவும், பாஜ., அமைதியை விரும்பும் கட்சி என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கச்சத்தீவு இலங்கையிடம் இருப்பதால் அந்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை அதனை நாம் திரும்ப பெற வேண்டும். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.,வின் கோரிக்கை ஆகும். அனைத்து மதத்திற்கும், அனைவருக்குமான கட்சி பா.ஜ., யாருக்கும் எதிரான கட்சி அல்ல.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதில் பா.ஜ.,வுக்கு மாற்று கருத்தில்லை. கார் மீது காலணி வீச்சு சம்பவம் விரும்பத்தகாத ஒன்று. அதனை ஒரு போதும் பா.ஜ., நியாயபடுத்தாது. ஆக்ரோஷமாக ஓரிருவர் செய்த தவறான செயல் ஒட்டுமொத்த பா.ஜ.,வின் செயல்படாக பார்க்க கூடாது .


latest tamil news


அமைச்சர் பேசிய பேச்சு தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத சம்பவம் அது தவறு. தொண்டர்கள் உணர்ச்சி வசபடக்கூடாது அமைதியை கடைபிடித்திருக்க வேண்டும். பா.ஜ., கலவரத்தை விரும்பும் கட்சி அல்ல. அமைதியை விரும்பும் கட்சியான பா.ஜ.,வில் இது போல் நடந்தது வருந்தத்தக்கது. நான் முன்பே விமான நிலையம் வந்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும். காலணிவீசிதாக கைது செய்யப்பட்டவர்களில் அப்பாவிகள். சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவருக்கு எங்கிருந்தாலும் வாழ்த்துகள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Trichy,இந்தியா
15-ஆக-202213:49:16 IST Report Abuse
Tamil அமைதிக்கும் பி ஜெ பிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? சிரிப்பு காட்டுகிறார் தமிழக பி ஜெ பி தலைவர். தரமான மனிதர். தவறான இடம்.
Rate this:
Cancel
VENKATESAN V - VANIYAMBADI,இந்தியா
15-ஆக-202209:51:25 IST Report Abuse
VENKATESAN  V தலைவர் அவர்கள் பண்பான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றால் செய்தவர் யார்?.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-ஆக-202202:23:23 IST Report Abuse
BASKAR TETCHANA இன்று சரவணன் நாளை யாரோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X