தேசியத்தை பா.ஜ., விட்டுக்கொடுக்காது: எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேச்சு| Dinamalar

தேசியத்தை பா.ஜ., விட்டுக்கொடுக்காது: எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேச்சு

Added : ஆக 14, 2022 | |
கோவை: "எக்காரணத்தை கொண்டும் தேசியத்தை பா.ஜ., விட்டுக்கொடுக்காது," என, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசினார்.நாட்டின், 75வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள் என அனைத்திலும் தேசியக்கொடி ஏற்ற, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.பா.ஜ., சார்பில், கோவையில் 'வந்தே
தேசியத்தை பா.ஜ., விட்டுக்கொடுக்காது: எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேச்சு

கோவை: "எக்காரணத்தை கொண்டும் தேசியத்தை பா.ஜ., விட்டுக்கொடுக்காது," என, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசினார்.நாட்டின், 75வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள் என அனைத்திலும் தேசியக்கொடி ஏற்ற, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.பா.ஜ., சார்பில், கோவையில் 'வந்தே மாதரம் யாத்திரை'க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பவர்ஹவுஸ் சந்திப்பில், வந்தே மாதரம் யாத்திரையை கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் துவக்கிவைத்தார். ஏராளமான பெண்கள், குழந்தைகள் தேசியக் கொடி ஏந்தியபடி, வந்தே மாதரம் முழக்கத்துடன் பேரணியாக சென்றனர்.தேசியக்கொடியை பிரதிபலிக்கும் பலுான்கள், வ.உ.சி., மற்றும் தீரன் சின்னமலை, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், அம்பேத்கர், பாலகங்காதர திலகர் உள்ளிட்ட தேச விடுதலைக்கு பாடுபட்டவர்களின் படங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் ஏந்திச் சென்றனர். குழந்தைகள் 'ஸ்கேட்டிங்' செய்தபடி, தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். பேரணி, 100 அடி ரோடு, சித்தாபுதுார் வழியாக, வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நிறைவடைந்தது.நிறைவில் வானதி சீனிவாசன் பேசுகையில், “முதலில் நாடு; கட்சி அடுத்தது என்பது பா.ஜ.,வின் கொள்கை. அதனால்தான் பேரணியில் கட்சிக் கொடியை பார்க்க முடியவில்லை. தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தேசியக்கொடிகளை ஏற்றுங்கள். எக்காரணத்தைக்கொண்டும் நாட்டின் ஒற்றுமையை, தேசியத்தை பா.ஜ., விட்டுக்கொடுக்காது,” என்றார்.பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X