அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா சாதிக்க போவது என்ன? சர்வே முடிவுகள்..!

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு தினத்தை கொண்டாடி வரும் வேளையில், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் செல்வாக்குமிக்க நாடாக இந்தியா திகழுமென பெரும்பாலான இந்தியர்கள் எண்ணுவதாக சர்வே ஒன்றில் கூறப்பட்டுள்ளது.அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா எந்தெந்த துறைகளில் சாதனைகள் நிகழ்த்துமென்ற மக்களின் எதிர்ப்பார்ப்புகள் குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நாடு முழுவதும் சர்வே
India Economy, Survey, Local Circles, இந்தியா, சர்வே, லோக்கல் சர்க்கிள்ஸ், செல்வாக்கு, பொருளாதாரம், 5 ஆண்டுகள், மக்கள், எதிர்ப்பார்ப்புகள்


நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு தினத்தை கொண்டாடி வரும் வேளையில், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் செல்வாக்குமிக்க நாடாக இந்தியா திகழுமென பெரும்பாலான இந்தியர்கள் எண்ணுவதாக சர்வே ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா எந்தெந்த துறைகளில் சாதனைகள் நிகழ்த்துமென்ற மக்களின்
எதிர்ப்பார்ப்புகள் குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நாடு முழுவதும் சர்வே நடத்தியது. நாடு முழுவதும் 371 மாவட்டங்களில், சுமார் 79,000 பேரிடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற 64 சதவீதம் பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

1. இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது குறித்த கேள்விக்கு 43 சதவீதம் பேர், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் மிகப்பெரிய சவாலாக இருக்குமென கூறியுள்ளனர். அதற்கு அடுத்ததாக 17 சதவீதம் பேர் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பது என்றும், 13 சதவீதம் பேர் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது என கூறியுள்ளனர்.


latest tamil news2. இந்தியாவால் போதுமான வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்க முடியுமென 39 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

3. நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு அடுத்த 5 ஆண்டுகளில் எவ்வாறு மாறும் என்ற கேள்விக்கு, ஒட்டுமொத்தமாக 82 சதவீதம் பேர், உலகளவில் செல்வாக்குமிக்க நாடாக இந்தியா விளங்குமென தெரிவித்துள்ளனர். 14 சதவீதம் பேர் செல்வாக்கு சரிய கூடுமென கூறியுள்ளனர்.


latest tamil news4. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழிப்பை குறித்து எதிர்ப்பார்ப்பு குறித்த கேள்விக்கு, அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் செல்வசெழிப்பு கிடைக்குமெனவும் 24 சதவீதம் பேரும், பெரும்பாலானோருக்கு வளர்ச்சி மற்றும் செல்வசெழிப்பு கிடைக்குமென 36 சதவீதம் பேரும், சிலர் மட்டுமே வளர்ச்சியடைவர் என 38 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

5. இந்தியாவில் சமூக நல்லிணக்கம் அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றமடையுமா என்ற கேள்விக்கு, முன்னேற்றம் ஏற்படுமென 40 சதவீதம் பேரும், 24 சதவீதம் பேர் தற்போதைய நிலை தொடருமெனவும், சீரழியுமென 33 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
15-ஆக-202202:11:07 IST Report Abuse
chakra மோடிஜி எட்டு ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கி விட்டார் அடுத்து என்ன வல்லரசுதான் . மோடிஜியை கண்டு எதிரிகள் பயந்து நடுங்குகிறார்கள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஆக-202220:08:38 IST Report Abuse
sankaseshan We can identify persons who have given negative opinions. They are antinationals like congress ,leftists, tukde tukde gangs and similar people
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-ஆக-202219:43:36 IST Report Abuse
Ramesh Sargam மோடியின் நல்லாட்சி தொடரும் பட்சத்தில் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏட்பட அதிக வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X