ஜெய்சங்கர் வீடியோவை காட்டி இந்தியாவை புகழும் இம்ரான் கான்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
லாகூர்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, மாநாடு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் புகழ்ந்து பேசியுள்ளார். கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியையும் காண்பித்தார்.லாகூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தான் சுதந்திரம்
ImranKhan, Jaishankar, Video, Rally, Praise, India, Foreign Policy,

லாகூர்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, மாநாடு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் புகழ்ந்து பேசியுள்ளார். கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியையும் காண்பித்தார்.

லாகூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற காலத்தில் தான் இந்தியாவும் சுதந்திரம் பெற்றது. புதுடில்லி, தனது மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சுதந்திரமான வெளியுறவு கொள்கையை வரையறை செய்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் ஷபாஸ் ஷெரீப் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா. பாகிஸ்தான் அல்ல. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா உத்தரவிட்டது. இதற்கு,இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதிலை பாருங்கள் எனக்கூறி வீடியோ ஒன்றை காண்பித்தார்.


latest tamil news



ஸ்லோவேகியா நாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் அளித்த பதிலில், நீங்கள் யார்? ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு எனக்கூறியுள்ளார். இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனை காண்பித்து இந்தியாவை புகழ்ந்து பேசிய இம்ரான் கான், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து, வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைதனத்தை நான் எதிர்க்கின்றேன். இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஆக-202220:06:50 IST Report Abuse
r.sundaram நமது எதிர்க்கட்சிகள், முக்கியமாக காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதது எல்லாம் இம்ரான்கானுக்கு தெரிகிறது.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
16-ஆக-202218:36:06 IST Report Abuse
ponssasi அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள். நாம் அப்படி அல்ல நாம் பிறந்த மண்ணை வணங்குபவர்கள், தாய் திருநாட்டை நேசிப்பவர்கள், நமது தேசிய கொடியை போற்றி வணங்குபவர்கள். நமக்கும் அவர்களுக்கும் இதுதான் வேறுபாடு நமக்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் இவர்கள்.
Rate this:
Cancel
Ranganathan PS - chennai,இந்தியா
16-ஆக-202214:50:17 IST Report Abuse
Ranganathan PS ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X