அரசியல் விளையாட்டு எடுபடாது: முதல்வர் ஸ்டாலின்| Dinamalar

''அரசியல் விளையாட்டு எடுபடாது'': முதல்வர் ஸ்டாலின்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (72) | |
சென்னை: ‛இது தமிழகம்! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல் தனத்தை அடக்குவோம். இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டின் மூவர்ண கொடிகளையும், விடுதலைக்காக பாடுப்பட்ட உண்மையான
ஸ்டாலின், DMK, MK Stalin, Stalin, தி.மு.க, ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ‛இது தமிழகம்! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல் தனத்தை அடக்குவோம். இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டின் மூவர்ண கொடிகளையும், விடுதலைக்காக பாடுப்பட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். இது தமிழகம்! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம். தேசபக்தி என்றாலே லேபிள் ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம். தாங்கள்தான் தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என நினைத்து, வரம்பு மீறுவது வாடிக்கையாகி வருகிறது.



latest tamil news


இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கின்றனர். அமைச்சரின் காரின் மீது செருப்பு வீசியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தேசியக்கொடியை அவமதித்தும், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவனத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X