பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

Added : ஆக 14, 2022 | |
Advertisement
கோவை:கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் அரசூரில் நடந்தது.இதில், மாணவர்களுக்கான பாட்மிண்டன், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, ஹேண்ட்பால் மற்றும் மாணவியருக்கான பாட்மிண்டன், கூடைப்பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தன.இப்போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 60 பள்ளிகளில் இருந்து 85 அணிகள் பங்கேற்றன.
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

கோவை:கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் அரசூரில் நடந்தது.இதில், மாணவர்களுக்கான பாட்மிண்டன், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, ஹேண்ட்பால் மற்றும் மாணவியருக்கான பாட்மிண்டன், கூடைப்பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தன.இப்போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 60 பள்ளிகளில் இருந்து 85 அணிகள் பங்கேற்றன. போட்டியை கல்லுாரி முதல்வர் அகிலா துவக்கி வைத்தார்.மாணவர் பிரிவு: பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் சவக்காட்டுப்பாளையம் அரசு பள்ளி அணி, 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் பாரதி மெட்ரிக் பள்ளி அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. கூடைப்பந்து இறுதிப்போட்டியில் ஆர்.கே. ஸ்ரீரங்கம்மாள் பள்ளி, 48 - 23 என்ற புள்ளிக்கணக்கில் என்.எஸ்., மெட்ரிக் பள்ளியை வென்றது.கால்பந்து இறுதிப்போட்டியில், தசரதன் பள்ளி அணி, 8 - 1 என்ற கோல் கணக்கில் ஹோலி ரோசரி பள்ளி அணியை வீழ்த்தியது.ஹேண்ட்பால் இறுதிப்போட்டியில், ஜி.கே.டி., மெட்ரிக் பள்ளி அணி, 23 - 16 என்ற புள்ளிக்கணக்கில் சக்தி சர்வதேச பள்ளி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.வாலிபால் இறுதிப்போட்டியில், சபர்பன் பள்ளி அணி, 2 -0 என்ற நேர் செட் கணக்கில் அகர்வால் பள்ளி அணியை வீழ்த்தியது.மாணவியர் பிரிவு: வாலிபால் இறுதிப்போட்டியில் ஈரோடு ஜி.டி.எஸ்., பள்ளி அணி, 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் ஏ.பி.சி., பள்ளி அணியை வென்றது.கூடைப்பந்து இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி அணி, 48 - 23 என்ற புள்ளிக்கணக்கில் சுகுணா பள்ளியை வீழ்த்தியது.பூப்பந்து இறுதிப்போட்டியில், ராமசாமி நாயுடு பள்ளி அணி, 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் ராமகிருஷ்ண மெட்ரிக் பள்ளி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் சர்வதேச தொடர்பு இயக்குனர் மணிகண்டன் பரிசுகளை வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X